பி.எட்., ஆசிரியர் நியமனம்: 2வது இடத்திற்கு வந்த தமிழ். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2012

பி.எட்., ஆசிரியர் நியமனம்: 2வது இடத்திற்கு வந்த தமிழ்.

பி.எட்., ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு 2ம் இடம்
ஒதுக்கியதால், தமிழ் பாட ஆசிரியர்கள் நியமனம்
அதிகரித்துள்ளது. இந்த புதிய உத்தரவால்,தமிழ்
பாடங்களுக்குகாலியாக உள்ள 2,080 ஆசிரியர்
பணியிடங்களில், 1,550 தமிழ் ஆசிரியர்கள், டி.இ.டி.,தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில்,அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 360
மாணவர்களுக்கு,ஒரு கூடுதல் பட்டதாரி ஆசிரியர்களை
நியமிக்க,அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அறிவியல்,ஆங்கிலம், கணிதம்,சமூக அறிவியல்,
தமிழ் என்ற வரிசைப்படி, பி.எட்.,ஆசிரியர்களை
நியமித்தனர்.இந்த நடைமுறைக்கு,தமிழாசிரியர்கள்
சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து,
டி.இ.டி.,தேர்வில், 360 மாணவர்களுக்கு
மேற்பட்ட பள்ளிகளில்,கூடுதல் ஆசிரியர்களை
நியமிக்கும் வரிசையில்,இரண்டாவது தமிழ் பி.எட்., ஆசிரியர்களை நியமிக்கலாம் என அரசு உத்தரவிட்டது.
2வது இடத்தில் இருந்த ஆங்கில பாடம் கடைசி நிலைக்கு சென்றது.தமிழ் ஆசிரியர் கழக மாநில
நிர்வாகி இளங்கோவன் கூறுகையில், "அரசின்
இந்த புதிய உத்தரவால்,தமிழ் பாடங்களுக்குகாலியாக
உள்ள 2,080 ஆசிரியர் பணியிடங்களில், 1,550
தமிழ் ஆசிரியர்கள்,டி.இ.டி.,தேர்வு மூலம்
நியமிக்கப்பட்டுள்ளனர்.இது வரவேற்கத்தக்கது,"
என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி