ஆசிரியர் பயிற்சி முடித்து, 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2012

ஆசிரியர் பயிற்சி முடித்து, 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை.

ஆசிரியர் பணிமுடித்து 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் பூசைதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்–அமைச்சருக்கு நன்றிதமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சுமார் 21 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்து, நேரடி பார்வையின் மூலம் பணி நியமன ஆணையை வழங்கிய தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.இன்று பல ஆயிரம் ஆசிரியர்கள் பி.எட், முடித்து விட்டு தனியார் பள்ளிகளில் 40 முதல் 45 வயது கடந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு வயதின் அடிப்படையில் கருணை காட்ட வேண்டும். இவர்களுக்கு 50 சதவீதம் வேலை வாய்ப்பு பதிவு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும்.ஆசிரியர் தகுதி தேர்வில் மத்திய அரசின் விதியை பின்பற்றி எஸ்.சி., எஸ்.டி. ஆசிரியர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்கள் சலுகை அளிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் அருந்ததியினருக்கு எஸ்.சி., எஸ்.டி. அமைப்பில் உட்பிரிவு வழங்கியதை ரத்து செய்யவேண்டும்.பதிவு மூப்புஆசிரியர் தகுதி தேர்வு மூலம் 50 சதவீதமும், வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் 50 சதவீதமும் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். 30 வயது வரை உள்ளவர்களை ஆசிரியர் தகுதி தேர்வு மூலமும், 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி