வெளிவராத தமிழ் அகராதி: டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு சிக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2012

வெளிவராத தமிழ் அகராதி: டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு சிக்கல்.

கடந்த 2000ம் ஆண்டுக்கு பின், தமிழ் ஆட்சிமொழி அகராதி வெளி வராததால், அரசுத் துறை தேர்வு எழுதுவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தமிழாசிரியர் கழகத்தினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து மாநில நிர்வாகி இளங்கோவன் கூறுகையில், "கடந்த 1957 முதல் 2000ம் ஆண்டு வரை, 6 தமிழ் அகராதிகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்பிறகு 12 ஆண்டுகளாக புதிய அகராதி வெளிவரவில்லை. தற்போது நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி., உட்பட அரசு துறை தேர்வுகளில், தமிழ் அகராதிகளில் இருந்து, கேட்கும் சில கேள்விகளுக்கு, விடை காண முடியவில்லை.சமீபத்தில், சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் கூட, ஈரோடு பகுதியில் பேசப்படும்,"ஈமு" எனும் வார்த்தைக்கு யாராலும்,விளக்க மளிக்க முடியவில்லை. காரணம், பழைய தமிழ் அகராதிகளில்"ஈமு" என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் சொல் இல்லை.ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த வட்டாரத்தில் புதுப்புது தமிழ் வார்த்தைகள் பிறக்கின்றன. இவற்றிக்கு, தமிழில் சரியான வார்த்தையை கண்டுபிடிக்க முடியாமல், தமிழாசிரியர்கள், அரசு அதிகாரிகள் திணறுகின்றனர்.தமிழ் வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் அகராதி புத்தகங்களை பொது மக்கள் படிக்க முடியாத நிலையில், ஆசிரியர் அரசு துறையை சார்ந்தவர்கள் படிக்க, சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி கடிதம் பெறுதல் என்ற கட்டாய உத்தரவை தளர்த்த வேண்டும்.குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிக்குள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் அகராதிகளை வெளியிட வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி