அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது, தனியாக பள்ளி நடத்தினால் புகார் அளிக்கலாம், சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீதுதுறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2012

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது, தனியாக பள்ளி நடத்தினால் புகார் அளிக்கலாம், சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீதுதுறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 435பேர் தேர்வு எழுதினர். இதை மேற்பார்வையிட வந்திருந்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு படிக்கும்போது கல்வி உதவித்தொகைமாதம் ரூ.500 வீதம் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் வழங்கப்பட உள்ளது.இந்த உதவித் தொகையைப் பெற திருவண்ணாமலையில் 415, ஆரணியில்435, செய்யாறில் 496 என திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1,346 மாணவர்கள் தேர்வு எழுதினர்.திருவண்ணாமலை மாவட்டம், கல்வித் தரத்தில் தமிழக அளவில் 27வது இடத்தில் உள்ளது. இதனை 10 இடத்துக்குள் கொண்டு வருவதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்தி பல்வேறு வகையானஆலோசனைகளை வழங்கியுள்ளோம்.நன்கு படிக்காத மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்ணாவது பெற்றுதேர்ச்சி பெறும் அளவிற்கு கேள்வித்தாள்களை தயாரித்துத் தருவது, அதற்கான பதில்களை எப்படி எழுதுவது, மாணவர்களுக்கு எப்படி சொல்லித் தருவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.ஆசிரியர்கள் சொல்லித்தரும் பாடத்தை மாணவர்கள் வீட்டில் படிக்கிறார்களா என்று பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது, தனியாக பள்ளி நடத்துவதுபெரிய தவறு. இதுபோன்ற நடவடிக்கையில் யாராவது ஈடுபட்டால் புகார் அளிக்கலாம். சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) செ.முருகேசன் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி