ஆசிரியர் நியமனத்தில் இடஓதுக்கீடு கடைபிடிக்காதது தவறா? சரியா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2012

ஆசிரியர் நியமனத்தில் இடஓதுக்கீடு கடைபிடிக்காதது தவறா? சரியா?

கடந்த 13 ஆம் தேதி பணி நியமன ஆணைகளை வாங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் கிடைத்த அதிர்ச்சி அதில் இருந்த 15விதிமுறைகள் தான்.
Terms and Condition என்ற பெயரில் பல பொருட்களை வாங்கும் போது அதில் இருக்குமே அதே போலதான் இருந்தது அந்த ஆணை. அதில் முதல் செய்தியே ‘இந்த நியமனம்நிலுவையில் உள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது என்பதே. ஆசிரியர் பணி நியமனத்தில் SC,ST, மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு நினைத்தால் 5 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை மதிப்பெண்ணில் குறைத்து சலுகை வழங்கலாம் என்ற TET விதிமுறையை மையப்படுத்தி தொடர்ப்பட்ட வழக்கின்படி விசாரணை நடந்து வருகிறது.அது மட்டும் இல்லாமல் சாதிய அடிப்படையில் பணிநியமன ஒதுக்கீது சரியாக அமல் படுத்தவில்லை என்பதும் ஒரு வழக்காக இன்று நிலுவையில் உள்ளது.ஆசிரியர்கள் இல்லாமல் பல பள்ளிகளை இந்த மூன்று ஆண்டுகளாக இருந்த ஆசிரியர்களை வைத்து சரிகட்டி ஓட்டி வந்திருக்கிறது நம் அரசு. ஆசிரியர் தகுதித் தேர்விலாவதுதகுதியான ஆசிரியர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில்வைக்கப்பட்ட TET தேர்விலும் போதுமான ஆசிரியர்கள் கிடைக்க பெற வில்லை. எனவே மீண்டும் மறுத் தேர்வாக பணம் இன்றி - இலவசமாகவே ஒரு தேர்வினை மனிதாபிமான முறையில் நடத்தினார்கள் அதில் கிடைத்ததும் பாதி வெற்றிதான்.அதாவது பட்டதாரி ஆசிரியர்களில் 20,000 பேருக்கு பதிலாக தேர்வானது 10 ஆயிரம் தான். அது போல இடைநிலை ஆசிரியர்களும் இன்னும் தேவை என்ற அடிப்படையிலேயே தேர்வான அனைவருக்கும் பணிநியமனம் அளிக்கப்பட்டது.இதில் இடஒதுக்கீடு என்பதை விட தகுதியான ஆசிரியர்கள் என்பதைதான் அரசு தன் முழு கவனத்தில் கொண்டு செய்திருக்கிறது.  ஆயினும் 80 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்த SC,ST, மற்றும் மாற்றுதிறனாளிகளின் சார்பாகமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் இன்றும் குவிந்து கொண்டுதான் வருகின்றன.நீதி மன்ற தீர்ப்பு என்ன வரபோகிறதோ! என்பது இன்று பணியில் அமர்த்தப்பட்டுள்ள 20 ஆயிரம் ஆசிரியர்களின் முழுமுதல் கேள்வியாக உள்ளது.பணியில் அமர்த்தியவர்களை நீக்கி விட்டு - ஒரு முறையை கூறி நீதி மன்றம் அமல் படுத்த கூறினால் மற்ற பிற வேலைகளை துறந்து இந்த வேலையை தஞ்சம் புகுந்துள்ள பலருக்கு அது பெரிய சிக்கலாகவே அமையும்.‘இனி வரும் காலங்களிலாவது‘ முறையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்ற தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் 20 ஆயிரம் பேரின் நிஜம் கனவாக மாறாமல் தப்பிக்கும்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி