தகவல் அறியும் உரிமைச் சட்டம் - RIGHT TO INFORMATION ACT - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2012

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - RIGHT TO INFORMATION ACT

1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ”என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப்
அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும்
அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங்
செய்து கொள்ளலாம்,மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில்
தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக
சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள்
இடம் பெற வேண்டும்,அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? ,தேதி, இடம்,
தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம்,
இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல்
மற்றும் கைப்பேசி எண் ,மின்னஞ்சல் முகவரி (இவை
இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவைகள் இடம்பெற
வேண்டும்.

3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும்.போலி விவரங்களை கொடுக்க வேண்டாம்.நம்முடைய
முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட்
செய்தோ அனுப்பலாம்.கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும்.மனுக்களை அனுப்பும்
முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல்
முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக் கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான
முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து
கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30
நாட்கள் கால அவகாசதிலும்,தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால
அவகாசத்திலும் கிடைக்கும்.நமது மனுக்கள்
நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும்
செய்துகொள்ளலாம்.

7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும்.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை
கேட்டுப்பெறலாம்?

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி