Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

குரூப்-2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.

0 Comments

தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் காலியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.இந்த ஆண்டு 27 அரசு துறைகளில் 35 பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களில், 10 ஆயிரத்து, 105 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த உள்ளது.தேர்வு முறையில் பத்து ஆண்டிகளுக்கு பின் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த, குரூப்-2 தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜ் தெரிவித்தார்.

Tamil Nadu Government Pensioners Health Fund Scheme, 1995 – Orders on approval of Registered Private Hospitals with effect from 01.04.2005 issued – Amendment – Issued.

0 Comments

GO.NO.18 FINANCE (PENSION) DEPARTMENT DATED.10.01.2013 CLICK HERE...

சமச்சீர் கல்வி வந்த பின் மெட்ரிக் இயக்குனரகம் தேவையா? - Dinamalar

0 Comments

மாநில பாடத் திட்டம்,மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும்ஓரியண்டல் கல்வி ஆகிய, நான்கு வகையான கல்வி திட்டங்களை ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தியுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கென, தனியாக இயக்குனர் அலுவலகம் தேவையா, என்ற கேள்வி எழுந்து உள்ளது.மெட்ரிக் இயக்குனரகத்தின் கீழ், 4,000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 25 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். புதிய பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்குவது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, பள்ளிகளுக்கு, அங்கீகாரத்தைப் புதுப்பித்து வழங்குதல், பள்ளிகளின் நிர்வாகங்களை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை, இயக்குனரகம் கவனித்து வருகிறது.சென்னையில் உள்ள, இயக்குனர் அலுவலகம் மற்றும் 15 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்கள் சேர்த்து, 70 பேர், பணியாற்றி வருகின்றனர். நான்கு வகையான கல்வி திட்டங்களை ஒருங்கிணைத்து,பொது பாடத் திட்டம் உருவாக்கி, அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், தனியார் பள்ளிகளுக்கு, இன்னும், மெட்ரிகுலேஷன் என்ற பெயர் இருந்து வருகிறது.இந்த பெயரை மாற்றுவது குறித்து, தமிழக அரசு, எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மேலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனரகம் இயங்குவது, தேவையற்ற நிர்வாகச் செலவை ஏற்படுத்தும் என்றும், இந்த இயக்குனர் அலுவலகத்தை, பள்ளிக் கல்வி இயக்குனரகத்துடன் இணைத்து விடலாம்என்றும், தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரத்தினர் கூறியதாவது: பாடத் திட்டங்கள் மட்டும் பொதுவானதாக மாற்றப்பட்டு உள்ளன. ஆனால், நான்கு விதமான கல்வி திட்டங்களுக்கான சட்ட விதிமுறைகள், அப்படியே உள்ளன. மாநில பாடத் திட்டம், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் ஆகிய, மூன்று கல்வி முறைகளுக்கான நிர்வாகம், பள்ளி கல்வித்துறையின் கீழ் இருக்கிறது.நர்சரி பள்ளிகளுக்கான நிர்வாக கட்டுப்பாடு, தொடக்க கல்வித்துறையிடம் உள்ளது. அனைத்து நிர்வாகப் பணிகளையும், ஒருகுடையின் கீழ் கொண்டு வர வேண்டும் எனில், முதலில் அதற்கான சட்ட விதிமுறைகளை நீக்கி விட்டு, பொதுவான சட்ட விதிமுறைகளை கொண்டு வர வேண்டும். இதை எல்லாம், அரசு தான் செய்ய வேண்டும்.இதை எதுவும் செய்யாமல், இயக்குனரகத்தை மட்டும், வேறொரு துறையுடன் இணைக்க முடியாது. ஏற்கனவே, பெரும் பணிச்சுமையுடன் இயங்கி வரும், பள்ளிக் கல்வி துறையிடம், தனியார் பள்ளிகளையும்ஒப்படைத்தால், மேலும் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால், பல்வேறு நிர்வாக குழப்பங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு, கல்வித்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது: மெட்ரிகுலேஷன் என்ற பெயரை எடுத்து விட்டு, தனியார் பள்ளிகளுக்கான இயக்குனரகம் என,அமைக்கலாம். இந்த நிர்வாகத்தை, பள்ளிக் கல்வியுடன் இணைத்தால்,நிர்வாகம் ஸ்தம்பித்து விடும். தனியார் பள்ளிகளுக்கு, பெரும்பிரச்னைகள் ஏற்படும்.நிர்வாக வசதிக்காகவும், பள்ளிகளை முறையாக கண்காணிக்கவும் தான், தனி நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிர்வாக முறையில், சில குறைகள் உள்ளன. குறிப்பாக, 15 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்களில், 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.இவர்களால், தனியார் பள்ளிகளை, சரிவர கண்காணிக்க முடியவில்லை. அனைத்து காலி பணியிடங்களை நிரப்பியும், நிர்வாகப் பணிகளை விரைவுபடுத்த, உரிய நடவடிக்கை எடுத்தாலே போதும்.இவ்வாறு, நந்தகுமார் கூறினார்.

வேலைக்கு படிப்பு போதாது தகுதியும் இருக்க வேண்டும்.

0 Comments

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யக்கோரி, பள்ளி நிர்வாகிகள் பலர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுக்களில், எங்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க அனுமதி கேட்டு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என கல்வி அதிகாரி உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுக்களை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:தமிழகத்தில் ஆசிரியர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலும், பின்னர், மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி, அதில் வெற்றிபெறுபவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.  அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.மாணவர்களுக்கு கட்டாய கல்வி, தரமான கல்வி கொடுக்க வேண்டியது அரசுகளின் கடமை. பதிவு மூப்பு அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்கும் போது தகுதியான, தரமான ஆசிரியர்கள் கிடைக்கமாட்டார்கள். தரமான கல்வி அளிக்காத அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத, ஐந்துஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது. ஆசிரியர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும். கடந்த 1991&92ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்தப் பள்ளிகளில் படித்தவர்கள் பலர் ஆசிரியர்களாக வந்துள்ளனர். 685 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் 73 ஆயிரம் பேர் படிப்பு முடித்து வெளியே வருகின்றனர். அவர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களில் தரமானவர்களை தேர்வு செய்ய தேர்வு கட்டாயம். பட்டம் இருந்தால் மட்டுமே ஒருவரை வேலைக்கு தேர்வு செய்ய முடியாது. அந்த வேலைக்கான தகுதியும் அவருக்கு இருக்க வேண்டும்.எனவே, ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

TNPSC ANNUAL PLANNER (2013-14) | 2013ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி. வெளியீடு.

0 Comments

click here to download ANNUAL PLANNER FOR THE YEAR 2013 - 2014 RELEASED BY THE HON'BLE CHAIRMAN    

தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான, தேர்வுஅட்டவணையை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நேற்று வெளியிட்டது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டுநிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டு, பல்வேறு அரசு துறைகளுக்கு, 18 ஆயிரத்து, 244 பேரை, டி.என்.பி.எஸ்.சி., தேர்ந்தெடுத்தது.இந்த ஆண்டு, 27 அரசு துறைகளில், 35 பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களில், 10 ஆயிரத்து, 105 இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை நடத்த உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டு, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறியதாவது: மருத்துவத் துறையில், உதவி அறுவை மருத்துவர் - 2,800;
கால்நடை உதவி அறுவை மருத்துவர் - 921;
இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் - 2,716;
வி.ஏ.ஓ., - 1,500 உள்ளிட்ட, 10 ஆயிரத்து, 105 பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.இந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.இத்தேர்வுகளுக்கான கால அட்டவணை, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முறையில், 10 ஆண்டுகளுக்கு பின், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இனி, குரூப்- 1 உள்ளிட்ட அனைத்து பிரிவு தேர்வுகளிலும், 50 மதிப்பெண்களுக்கு, திறனறி கேள்விகள் (Aptitude) கேட்கப்படும். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வுகளில், பொது அறிவு தாள் சேர்க்கப்பட்டுள்ளது. குரூப்- 2 பிரிவில், நேர்முகம் மற்றும் நேர்முகம் அல்லாத பணியிடங்களுக்கு, தனித்தனியாக தேர்வு நடத்தப்படும். குரூப் -1 தேர்வு, "மாநில குடிமை பணிகள் தேர்வு&' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குரூப்- 2 பிரிவில் உள்ள, நகராட்சிஆணையர், உதவி வணிக வரி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகள், குரூப் - 1 பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, குரூப்- 2 தேர்வு முடிவுகள்,பிப்., 1ம் தேதி வெளியிடப்படும். 2007ம் ஆண்டு முதல், பல்வேறு காரணங்களுக்காக, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 300க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகள், உரியவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். இவ்வாறு நடராஜ் தெரிவித்தார்.

5 பள்ளிகளை மூட முடிவு, 10 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை ஆரம்பிக்கவும், கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

0 Comments

பத்திற்கும் குறைவான மாணவர்களே உள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்தில், ஐந்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை ஆரம்பிக்கவும், கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.திருவாடானை ஒன்றியத்தில் 117 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் குழந்தைகளை சேர்ப்பதில், இப்பகுதி மக்களுக்கு ஆர்வம் இல்லை. இதனால் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர்.கலியணி கிராமத்தில் குழந்தைகள் சேராததால் இங்குள்ள ஒன்றிய துவக்கப்பள்ளி, கடந்தாண்டு மூடப்பட்டது. பிள்ளையாரேந்தல் ஒன்றிய துவக்கப்பள்ளியில் 7, கீழ்க்குடியில் 2, காட்டியனேந்தலில் 4, கீழக்கோட்டையில் 2, கிளியூரில் ஒன்று என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளையும் விரைவில் மூடவும், ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்துஇப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது: ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை அடிப்படை கல்வி அறிவு அவசியம் வேண்டும். இது, அரசு துவக்கப் பள்ளிகளில் முறையாக கிடைப்பதில்லை. எனவே, தனியார் பள்ளிகளை நாட வேண்டி உள்ளது, என்றனர். தொடக்கக் கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது: இலவச சீருடை, நோட்டு, புத்தகங்கள், பை இலவசமாக கொடுத்தும், குழந்தைகளை அரசுபள்ளிகளில் சேர்ப்பதில்லை. விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியும், ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்தியும், பெற்றோர்களிடம் மாற்றம் ஏற்படவில்லை. ஆகவே, குறைந்த மாணவர்களை உள்ள பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவாடானை, எஸ்.பி.பட்டினம், வெள்ளையபுரம், பெருவாக்கோட்டை, கல்லூர், மங்களக்குடி, தொண்டி கிழக்கு, பாசிபட்டினம், என்.மங்கலம் போன்ற ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், ஆங்கிலக் கல்வி முறை விரைவில் அமல்படுத்தப்படும். தனியார் பள்ளிகளுக்கு நிகராக, மாணவர்களை உருவாக்க, தீவிர முயற்சி எடுத்து வருகிறோம், என்றார்.

10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு எப்போது?

0 Comments

பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, செய்முறைத் தேர்வு நடக்கும் தேதியை, நேற்று வரை, தேர்வுத்துறை அறிவிக்கவில்லை. இதனால், மாணவ, மாணவியர் மத்தியில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பை பொறுத்த வரை, தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவியரும், அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும். இதனால், செய்முறைத் தேர்வு தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தேர்வுத்துறை வட்டாரத்தினர் கூறுகையில், "பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு, இன்னும் தேதி முடிவு செய்யவில்லை. பிப்ரவரி இறுதிக்குக்குள், செய்முறைத் தேர்வு, நடத்தி முடிக்கப்படும். இதற்கான தேதிகளை, ஓரிரு நாளில் அறிவிப்போம்"என, தெரிவித்தனர்.

பணிவரன் முறைக்காக ஆசிரியர்கள் தவம்.

0 Comments

புதிதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களின், சான்றிதழை சரிபார்த்து அனுப்புவதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் இழுத்தடிப்பதால், பணி வரன்முறை ஊதியம் பெற முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.கல்வித்துறையில், தொடக்க, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு, இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது.இதன்படி, டிகிரி சான்றிதழ், சம்பந்தப்பட்ட பல்கலைக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ், மாநில தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கும் அனுப்பப்படுகின்றன. பல்கலை அளவில் அனுப்பப்படும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, உடனே அனுப்பப்படுகிறது. ஆனால், தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பப்படும் சான்றிதழ்கள்,இழுத்தடித்து வழங்கப்படுகிறது. இதனால், ஆசிரியர்கள் பணி வரன்முறைபடுத்துவதில், தாமத நிலை நீடிக்கிறது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் இன்றி அவதிப்படுகின்றனர்.இவற்றை பெற விரும்பும் ஆசிரியர்கள், செலவுசெய்து, சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, 10ம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்க்கும் அதிகாரத்தை, அந்தந்த மாவட்ட, சி.இ.ஓ.,க்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இல்லையேல், அந்தந்த மாவட்டங்களிலேயே, மாற்று ஏற்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் இட ஒதுக்கீடு.

0 Comments

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, தொழிற்கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கினால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என, தமிழக ஆசிரியர் கூட்டணியின் எருமப்பட்டி வட்டார கிளைச் செயலாளர் ராமராசுதெரிவித்துள்ளார்.தமிழக அரசு கல்வியை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஜாமிண்டரி பாக்ஸ், அட்லஸ் மேம்ப், நோட்டுப் புத்தகம், சீருடை மற்றும் லேப்டாப், சைக்கிள், உதவித் தொகை போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.எனினும், ஒவ்வொரு ஆண்டும் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதாக, பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதற்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.இது குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்ட எருமப்பட்டி வட்டாரக் கிளை செயலாளர் ராமராசு கூறியதாவது:கடந்த, 2007ம் ஆண்டு முதல் துவக்கப்பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், தேர்வு மற்றும் மதிப்பெண்வழங்கும் முறை இல்லை. குறிப்பிட்ட நிலையை மாணவர்கள் கடந்தால், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்ல முடியும். இதன்மூலம் மாணவர்களது வாசிப்பு திறன் குறைந்தது. இது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.அதனால், கிராமப் புறங்களை சேர்ந்தவர்கள் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கினர். தற்போது, புத்தக வழி முறை இருந்தாலும் செயல்வழிக் கற்றல் உபகரணங்களும் துவக்கப்பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இது துவக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதற்கான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.அதே நேரத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த, மாணவர்களுக்கு கல்வி உபகரணம் முதல் உதவித் தொகை வரை பல்வேறு உதவிகள் வழங்கி வருகிறது.கடந்த சில ஆண்டுக்கு முன், கிராமப்புற பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த நடைமுறை இல்லை. அந்த நடைமுறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்.மேல்நிலைக்வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, தொழிற் கல்வியில் இட ஒதுக்கீடு கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் பட்சத்தில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்கவாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் பதவி உயர்வில் மாற்றம் செய்ய கோரிக்கை.

0 Comments

பள்ளிகளில் வரலாறு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வின் போது தற்போது பின்பற்றப்படும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என வரலாற்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்களில் ஆயிரக்கணக்கான வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இளங்கலை வரலாறு முடித்து ஆசிரியர் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது 1:3 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது.மொத்தமுள்ள வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு பணியிடங்களில் இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாறு படித்தவர்களுக்கு ஒரு பணியிடமும், இளங்கலையில் வரலாறு தவிர்த்த மற்ற பாடங்கள் படித்தும் முதுகலையில் மட்டும் வரலாறு படித்தவர்களுக்கு 3 பணியிடமும் ஒதுக்கப்படுகிறது. இதனால் இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாறை முதன்மை பாடமாக படித்த ஏராளமான ஆசிரியர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர்.தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் பழனியப்பன் கூறுகையில், ‘முதுகலை வரலாறு பாடத்திற்கான பதவி உயர்வில் 1:3 என்ற விகிதாச்சார முரண்பாடுள்ள அரசாணை எண் 266ல் மாற்றம் செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.தற்போதைய ஆண்டு நிலவரப்படி பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதவி உயர்வில் உள்ளஇந்த ஏற்றுக்கொள்ள முடியாத முறையை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

தொடக்கக் கல்வி - சில்லறை செலவினம் - ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் முறையான பணியிடத்திற்கு கொண்டு வரப்பட்டவர்கள் தற்காலிக பணியிடம் நீட்டிப்பு ஆணை 1.1.2013 முதல் வழங்க விவரங்கள் கோருதல் - சார்பு.

0 Comments

DEE - TEMPORARY POSTS PAY CONTINUATION FROM 01.01.2013 DETAILS CALLED REG - PROC CLICK HERE...

அரசுத் தேர்வுகள் - பனிரெண்டாம் / பத்தாம் வகுப்பு தேர்வுகள் சிறப்பாக நடத்த அறிவுரைகள் வழங்கும் பொருட்டு அனைத்து ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 09.02.2013 அன்று திருச்சியில் நடைபெற உள்ளது.

0 Comments

DGE - HSE / SSLC PUBLIC EXAMINATION 2013 - ALL INSPECTION MEETING HELD ON 09.02.2013 AT TRICHY REG - PROC CLICK HERE...

Dept. of Treasuries and Accounts - Download Pay roll 9.0

0 Comments

Dept. of Treasuries and Accounts - Download Payroll9.0 Click Here...

TNPSC : Annual plan Released

0 Comments

Annual plan click here

30/01/2013பள்ளிகளில் தீ தடுப்பு கருவி அமைக்க கல்வித்துறை வலியுறுத்தல் ப

0 Comments

பள்ளிகளில் தீ தடுப்பு கருவி அமைத்து பள்ளி வாகன பராமரிப்பு ஆய்வு செய்ய பள்ளி நிர்வாகங்கள் முன் வர வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.         அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தீ தடுப்பு கருவிகள் பொருத்த வேண்டும் என தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் அதனை பல பள்ளிகளில் செயல்படுத்தப்படுவதில்லை என்று புகார் கூறப்படுகிறது. இதனால்பள்ளிகளில் திடீரென தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அதனை உடனடியாக அணைக்க முடியவில்லை. இதன் காரணமாக தீ விபத்தின் பாதிப்பு அதிகமாகி விடுகிறது. அதே போல பள்ளி வாகனங்களில் தீயணைப்பு கருவி வைக்க வேண்டும் என கூறப்பட்டாலும் அதுவும் சரிவர பின்பற்றப்படுவதில்லை.       இதனால் பள்ளிகளில் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம் மாவட்ட தொடக்கக் கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில்கூறியிருப்பதாவது: பள்ளி மாணவ, மாணவிகளின் கநன் கருதி பள்ளிகளிலும், பள்ளி வாகனங்களிலும் தீயணைப்பு கருவிகள் மற்றும் முதலுதவி பெட்டிகள் முறையாக வைக்கப்பட்டு அவை நடைமுறையில் பராமரிக்கப்பட்டு வருவதை தீயமைப்பு சேவை கூட்டமைப்பு ஆய்வு செய்து அறிக்கையை பள்ளிக் கல்வி துறை செயலருக்கு அனுப்பப்பட இருக்கிறது. இதனால் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை முக்கியத்துவம் பற்றியும், பள்ளி வாகனங்கள் பராமரிக்கப்பட வேண்டியதவ் அவசியம் பற்றியும் விளக்கிட வேண்டும்.தீ சேவை கூட்டமைப்பின் ஆய்வுக்கு ஒத்துழைப்பு வழங்க பள்ளி நிர்வாகங்கள் முன் வர வேண்டும். இவ்வாறு கல்வித்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1 தேர்வு தேதி அறிவிப்பு.

0 Comments

பிளஸ் 1 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்தேர்வுகள் வரும் மார்ச் 5ம் தேதி முதல் 28ம் தேதிவரை நடைபெறும். மார்ச் 5ம் தேதி மொழித்தாள் ஒன்று, 8ம்தேதி மொழித்தாள் இரண்டு, 12ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 13ம் தேதி ஆங்கிலம் 2ம் தாள் ஆகிய தேர்வுகள் நடக்கும். 19ம் தேதி இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகளும், 20ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வும், 22ம் தேதி வேதியியல் மற்றும் கணக்கு பதிவியலும், 26ம் தேதி கணிதம் மற்றும் வணிக கணிதமும், 28ம் தேதி உயிரியல் மற்றும் வணிகவியல் ஆகிய தேர்வுகளும் நடக்கும் என தேர்வு துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை.

0 Comments

தமிழகம் முழுவதும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், மே மாதத்திற்கு முன், மாணவர் சேர்க்கை பணி மேற்கொள்ளக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. மே மாதத்திற்கு முன்பாக, மாணவர் சேர்க்கை நடந்தால்,சம்மந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.தமிழகத்தில் சில மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை, தற்போதே துவக்கி விட்டனர். மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடைபெறுகிறது. இதுகுறித்து பொதுமக்கள், முதல்வருக்கு புகார் மனு அனுப்பினர்.அதைத் தொடர்ந்து, மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர், அனைத்து மாவட்டத்திலும் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்திற்கு, சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில், மாவட்டத்தில் செயல்படும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், 2013-14ம் கல்வியாண்டிற்கான, மாணவர் சேர்க்கை, வரும் மே மாதம், துவக்கப்பட வேண்டும்.அதற்கு முன், மாணவர் சேர்க்கை மேற்கொள்ளக் கூடாது என, அனைத்துபள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்திலிருந்து, அனைத்து பள்ளிகளுக்கும், மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.மே மாதத்திற்கு முன்பாக, மாணவர் சேர்க்கை நடந்தால், சம்மந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives