1 கோடி மாணவர்கள் விவரம் இணையதளத்தில் பதிவு பிப்.15 வரைஅவகாசம் - பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2013

1 கோடி மாணவர்கள் விவரம் இணையதளத்தில் பதிவு பிப்.15 வரைஅவகாசம் - பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை.

தமிழகம் முழுவதும் உள்ள 1.33 கோடி பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதியுடன் முடிகிறது. இதை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்ய பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ளஅரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து வகைபள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விவரங்களை உள்ளடக்கி கல்வி நிர்வாகதகவல் கட்டமைப்பை உருவாக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த தகவல்களின் அடிப்படையில் பல திட்டங்களை செயல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக மாணவர்களின் பெயர், வகுப்பு, பிரிவு, தாய், தந்தை பெயர், வீட்டு முகவரி, தந்தையின் தொழில், குடும்ப வருமானம் என பல விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த பணி கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ள பிரத்யேக இணையதளத்தில் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.மின்வெட்டு பிரச்னை, மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து தாமதமாக கடிதங்களை பெற்றது போன்ற காரணங்களால் தனியார் பள்ளிகளில் பணிகள் முடியாத நிலை இருப்பதால், கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பு செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆரம்பத்திலேயே இறுதியான தேதியை தெரிவித்தால் பணிகளை முடிக்காமல்இருந்து விடுவர். இதனால் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவித்தோம். ஆனால் பல பள்ளிகளில் பணிகள் முடியாமல்இருப்பதாக எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே கால அவகாசத்தை பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு செய்ய திட்டமிட்டுள்ளோம். இது குறித்த அறிவிப்பு மாத கடைசியில் பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி