கூடுதல் டிஇஓக்கள் நியமிக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தலைமையாசிரியர்கள் 29ம் தேதி போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2013

கூடுதல் டிஇஓக்கள் நியமிக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தலைமையாசிரியர்கள் 29ம் தேதி போராட்டம்.

மாவட்டக் கல்வி அலுவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தலைமையாசிரியர்கள் வரும் 29ம் தேதி ஆர்ப்பாட்டம்நடத்த உள்ளனர்.தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: மத்திய அரசுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கான கட்டிட பணிகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள்தான் கட்டி முடிக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது. இதனால் கூடுதல் பணிச்சுமையால், வழக்கமான பணிகளைக் கூட தலைமையாசிரியர்கள் செய்ய முடியவில்லை. எனவே பள்ளி கட்டுமான பணிகளை அரசே செய்ய வேண்டும்.தமிழகத்தில் தற்போது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. எனவே மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை கூடு தலாக உருவாக்க வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலர்களை 20 சதவீதம் நேரடி நியமனம் செய்யும் முறையை கைவிட வேண்டும். அப்பணியிடங்களில் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள், நகராட்சி, மாநகராட்சி, கள்ளர் சீரமைப்பு பள்ளி, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் பணி வழங்க வேண்டும். கல்விப் பணி சிறப்பாக நடைபெற பிற துறை பணிகளை ஆசிரியர்களுக்கு திணிக்க கூடாது. பிளஸ் 2, 10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திவரும் 29ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்கள் முன்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி