ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து தமிழக அரசு மறு ஆணை வெளியிட தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து தமிழக அரசு மறு ஆணை வெளியிட தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை.

அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்ச்சி பற்றி அரசு மறு ஆணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர்அலுவலர் கழக மாநிலத் தலைவர் ஆ. மரியதாசன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் நியமன ஒப்புதல்களைரத்து செய்ய அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் 23.8.2010-க்கு பின் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள்தகுதி தேர்வு பெற்றிருந்தால்தான், பணி அமர்த்த ஏற்பு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் பெரும்பாலான ஆசிரியர்நியமனங்கள் முறையாக ஏற்பளிக்கப்பட்டு ஊதியம் பெற்று வருகின்றனர். இத்தகைய ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டால்அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த ஆணை 23.8.2010-க்கு முன்பாக வெளியிட்டு இருந்தால் பொருத்தமானதாக இருந்து இருக்கும்.முன்தேதியில் அமலுக்கு வரும் அந்த ஆணையை மூன்றாண்டுகளுக்குப்பின் அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலம்தாழ்த்தி வெளியிடப்பட்ட அரசு ஆணை ஆசிரியர் நலனுக்கு எதிரானது.எனவே, இந்த ஆணைக்கு முன்னதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்குபொருத்தமான காலக்கெடுவுக்குள் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றுஇருக்கவேண்டும் என்ற மறு ஆணையை அரசு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி