▼அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு சிபாரிசு செய்யும் காலம் வரும்: வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2013

▼அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு சிபாரிசு செய்யும் காலம் வரும்: வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்.

அரசுப் பள்ளிகளிலும் மாணவர்சேர்க்கைக்கு சிபாரிசு செய்யக்கூடிய நிலை விரைவில் வரும் என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கூறினார். பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற நுழைநிலை பயிற்சி நிறைவு விழாவில் அவர் பேசியது: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 21,000 தரமான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிரஏற்கெனவே 15,000 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன்மூலம் அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 25 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர், 6 முதல் 8-ம் வகுப்பு வரை 30 பேருக்கு ஓர் ஆசிரியர், 9 முதல் 10-ம் வகுப்பு வரை 35 பேருக்கு ஓர் ஆசிரியர், உயர்வகுப்புகளில் 40 பேருக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலை உருவாகியுள்ளது. தனியார் பள்ளிகளில் கூட 60 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர்தான் உள்ளனர்.தரமான ஆசிரியர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதால் அரசுப்பள்ளிகளின் தரம் விரைவில் உயரும். அப்போது அரசுப் பள்ளிகளில் மாணவர்சேர்க்கைக்குகூட சிபாரிசு கேட்டு பொதுமக்கள் வரக்கூடிய நிலை நிச்சயம் உருவாகும். புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க உரிய முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம், மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மைய முதல்வர் இரா.ஜெயந்தி, அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் எஸ்.கே.விஸ்வநாதன், யு.ஆர்.சி. பள்ளித் தலைவர் யு.ஆர்.சி. கனகசபாபதி, பள்ளித் தலைவர் கே.சரஸ்வதி, பள்ளி முதல்வர் ஆர்.கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி