வெப்சைட்டில் பள்ளி மாணவர்கள் விபரங்கள் :தொடரும் குழப்பத்தால் ஆசிரியர்கள் அதிருப்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2013

வெப்சைட்டில் பள்ளி மாணவர்கள் விபரங்கள் :தொடரும் குழப்பத்தால் ஆசிரியர்கள் அதிருப்தி

வெப்சைட்டில் பள்ளி மாணவர்கள் பதிவு விபரங்கள் தொடர்பாக தொடர்ந்து குழப்பம் நிலவுவதால் ஆசிரியர்கள் அதிருப்திஅடைந்துள்ளனர்.தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் விபரங்களை வெப்சைட்டில் வெளியிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நெல்லைமாவட்டத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே இதற்கான படிவங்கள் தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட ஏ.இ.ஓ அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால் தற்போது மீண்டும் இப்படிவங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டுமாணவர்களின் விபரங்களை பதிவு செய்ய வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வெப்சைட் வசதி இல்லாத சூழ்நிலையில் ஒவ்வொரு மாணவருக்கும் 15 ரூபாய் வரை செலவாகும்என தெரிவிக்கப்பட்டதால் ஆசிரிய, ஆசிரியைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.இப்பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி உட்பட பல்வேறு ஆசிரிய சங்கங்கள் "போர்க்கொடி' தூக்கின.இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் காதர் சுல்தான் கூறியதாவது:அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் விபரங்களை வெப்சைட்டில் வெளியிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஏற்கனவே மாணவர்கள் விபரங்களை பதிவு செய்வது தொடர்பாககல்வித் துறை அதிகாரிகள், கம்ப்யூட்டர் ஆசிரிய, ஆசிரியைகளுக்குபயிற்சி அளிக்கப்பட்டது.ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்களின் விபரங்களை பதிவு செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.எனவே, இந்த விபரங்களை பதிவு செய்வது தொடர்பாக கம்ப்யூட்டர் ஆசிரிய, ஆசிரியைகளின் உதவியுடன் மாவட்ட கல்வி அலுவலகங்கள், உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு முதன்மை கல்வி அலுவலர் கூறினார்.இதற்கிடையில் வெப்சைட் வசதி உள்ள பள்ளிகளுக்கு ஒவ்வொரு பள்ளிகளின் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர் பதிவு விபரங்களைகொண்டு சென்று கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் உதவியுடன் பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இப்பிரச்னையில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.எனவே, இதுதொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று ஆசிரிய, ஆசிரியைகள், தலைமை ஆசிரியர்கள் விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி