பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், பொறியியல் பேராசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2013

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், பொறியியல் பேராசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணைகள்.

கடந்த அக்டோபர் மாதம் தேர்வு செய்யப்பட்ட அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்றுதொழில்நுட்பக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.139 அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், 155 அரசுப் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு 2012 ஏப்ரல், மே மாதங்களில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்வு முடிவுகள் ஜூலை 8-ம் தேதியும், சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு தேர்வுப் பட்டியல் அக்டோபர் 18-ம் தேதியும் வெளியிடப்பட்டன.தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, தேர்வு பெற்ற விரிவுரையாளர்கள், பேராசிரியர்களோடு அரசுக் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களும் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் கூறியது:- அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் ஆகியோருக்கு விரைவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் நியமனம் தொடர்பாக வழக்கு இருந்ததால் ஆணைகளை வழங்கவில்லை. இதில் காலதாமதம் எதுவும் இல்லை.வழக்குகள் முடிந்துவிட்டதால்அரசிடம் இருந்து உத்தரவைப் பெற்று, இவர்களுக்கான பணி நியமன ஆணைகள் விரைவாக வழங்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி