முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணையில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2013

முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணையில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.

முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணையில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.பொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தோடு இணையும் இணைப்பு விழா மற்றும் ஒருங்கிணைந்த மாநில பொதுக்குழு கூட்டம்தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் காமராசு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். தஞ்சை மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்றார். மாநில பொது செயலாளர் திருஞானம், மாநில செயலாளர் சக்திவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் தங்கவெற்றிவேந்தன், பொது செயலாளர் செல்வமணி, சட்ட செயலாளர் கணபதி, மாவட்ட தலைவர் ஞானவரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தீர்மானங்கள்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
பள்ளிக்கல்வித்துறையில் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணையில் உரிய திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணப்பலன் மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட பேச்சுவார்த்தையின் போது ஒத்துக்கொண்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.ஆதிதிராவிடர்– கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அலகு விட்டு அலகு பணிமாறுதலுக்கு உரிய அரசாணை பெற்றிட ஆவன செய்யவேண்டும். விடுமுறை நாட்களில் முதுகலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, பணியிடை பயிற்சி போன்ற பயிற்சிகளை தவிர்க்க ஆவன செய்ய வேண்டும். அரசு பொதுத்தேர்வு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் மாவட்ட தலைநகரங்களிலேயேதீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி