விடுமுறை நாட்களில் பயிற்சி கூடாது : ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2013

விடுமுறை நாட்களில் பயிற்சி கூடாது : ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழுகூட்டம் தஞ்சையில் நடந்தது. மாநில தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 720ல் உரியதிருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, பணியிடை பயிற்சிபோன்றவற்றை தவிர்க்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய முறையையே தொடர வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்விக்கும் 15 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி