மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2013

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை.

தமிழகம் முழுவதும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், மே மாதத்திற்கு முன், மாணவர் சேர்க்கை பணி மேற்கொள்ளக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. மே மாதத்திற்கு முன்பாக, மாணவர் சேர்க்கை நடந்தால்,சம்மந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.தமிழகத்தில் சில மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை, தற்போதே துவக்கி விட்டனர். மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடைபெறுகிறது. இதுகுறித்து பொதுமக்கள், முதல்வருக்கு புகார் மனு அனுப்பினர்.அதைத் தொடர்ந்து, மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர், அனைத்து மாவட்டத்திலும் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்திற்கு, சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில், மாவட்டத்தில் செயல்படும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், 2013-14ம் கல்வியாண்டிற்கான, மாணவர் சேர்க்கை, வரும் மே மாதம், துவக்கப்பட வேண்டும்.அதற்கு முன், மாணவர் சேர்க்கை மேற்கொள்ளக் கூடாது என, அனைத்துபள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்திலிருந்து, அனைத்து பள்ளிகளுக்கும், மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.மே மாதத்திற்கு முன்பாக, மாணவர் சேர்க்கை நடந்தால், சம்மந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி