பிப்ரவரி முதல் வாரத்தில் செட் தேர்வு முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2013

பிப்ரவரி முதல் வாரத்தில் செட் தேர்வு முடிவு.

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு(செட்) முடிவுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என பாரதியார் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.இத்தேர்வு கடந்த 2012 அக்டோபர் 7ம் தேதி நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் 51,678 பேர் எழுதினர். மொத்தம் 27 பாடங்களுக்கு மூன்று தாள்களைக் கொண்டதாக தேர்வுநடந்தது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.ஜேம்ஸ் பிச்சை கூறியது: செட் தேர்வு வினாத்தாள் மதிப்பீடுகள் முடிந்துவிட்டன. அனைத்துப் பணிகளும் ஏறத்தாழ முடிந்துவிட்ட நிலையில், தேர்வு முடிவை வெளியிடத் தயாராக உள்ளோம். பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.)ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். ஒப்புதல் வந்தவுடன் பிப்ரவரி முதல் வாரம் அல்லது 2வது வாரத்தில் தேர்வு முடிவை வெளியிட உள்ளோம் என்றார்.செட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அரசு கல்லூரி மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள 3,000 பணியிடங்களை நிரப்ப ஆள் தேர்வு நடக்கும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி