ஊதிய முரண்பாடு நீக்கும் குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற ஆசிரியர் மன்றம் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2013

ஊதிய முரண்பாடு நீக்கும் குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற ஆசிரியர் மன்றம் கோரிக்கை.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது, ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஊதியமுரண்பாடுகள் களையப்படும் என்றும், பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்றும் அதிமுக வாக்குறுதி அளித்தது.ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டை நெருங்க உள்ள நிலையில் மேற்கண்ட வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பின்னர் ஊதிய முரண்பாடுகளை களைய ஐஏஎஸ் அதிகாரி கிருஷ்ணன் தலைமையில் 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அரசிடம் தனது பரிந்துரையை அளித்தும் இதுவரை முதல்வர் மவுனமாக இருந்துவருகிறார். எனவே அந்த குழுவின் பரிந்துரையை அரசு வெளியிட வேண்டும். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி நிதி அறிக்கையின் மீதான விவாதத்தில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி