இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு முன்பே மூன்றாவதுடி.இ.டி தேர்வை நடத்தி 15 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்ய டி.ஆர்.பி திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2013

இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு முன்பே மூன்றாவதுடி.இ.டி தேர்வை நடத்தி 15 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்ய டி.ஆர்.பி திட்டம்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு முன்பே மூன்றாவதுடி.இ.டி தேர்வை நடத்தி அதன் மூலம் புதியதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தேர்வு செய்ய டி.ஆர்.பிதிட்டமிட்டுள்ளது.புதிய ஆசிரியர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும் பணியில் சேர்வதற்கேற்ப தேர்வு அட்டவணையை தயாரித்து முடிக்க வேண்டும் என்று டி.ஆர்.பியிடம் கல்வித்துறை தெரிவித்துள்ளன. என்வே, அடுத்த டி.இ.டி தேர்வு குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். பள்ளி பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 10ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் ஏப்ரல் மாத இறுதியில் தேர்வை நடத்தி மே மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படலாம்என எதிர்பார்க்கப்படுகிறது.ஆசிரியர் பணியை எதிர்நோக்கி உள்ளவர்கள் கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். அதாவது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். அதிகப்படியான தகவல்களுக்கு +1, +2 வகுப்பு பாட புத்தகங்களை படித்தால் போதும்.பொதுவான வினாக்களுக்கு தினமும் செய்தித்தாள்களைப் படித்து குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது முக்கிய செய்தி, கட்டுரைகள், தலையங்கங்கள் போன்றவற்றினை சேகரித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.பாடவாரியான அட்டவணை தயார் செய்தும், பழைய வினாத்தாள்களை பார்த்துக்கொள்ளுதல், தேர்வுக்கு முன் குறைந்த பட்சம் 10 மாதிரி தேர்வுகளையாவது எழுதி பழ வேண்டும்.ஒரு தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால், படிப்பதை நிறுத்தி விடாமல் பணியில் சேரும் வரை என்ன வேண்டுமானாலும் நிகழலாம். கடின உழைப்புக்கும், முயற்சிக்கும் நிச்சயம் பலன் உண்டு. பட்டங்களுக்காக எழுதும் தேர்வு இதுவல்ல, பணிக்காக எழுதும் தேர்வு என்பதை நினைவில் நிறுத்தி திரைகடல் ஒடி திரவியம் தேடுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
When hand and mind work hard as one,Success strokes your palms
உள்ளமும், கையும் உழைக்கத் துணிந்தால்உள்ளங்கைகளில் வெற்றி குவியும்!

4 comments:

  1. Exam date sollita nalla erukkum.yaravathu therincha plse update pannunga sir plse.

    ReplyDelete
  2. Exam date may 7,2013 all the best

    ReplyDelete
  3. therchikkana mathippen kuraikkum thittam arasidamullatha? 55% ena matrinal nallayirukkum.

    ReplyDelete
  4. erkanave ezhuthiyavargalukkum 55% ena matri velai koduthal innum nallayirukkum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி