பிளஸ் 2 பொதுத் தேர்வு: இறுதிக் கட்ட பணிகளில் அதிகாரிகள் தீவிரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2013

பிளஸ் 2 பொதுத் தேர்வு: இறுதிக் கட்ட பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த நடவடிக்கைகளில், கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மார்ச் 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடக்கிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குஇன்னும் மூன்று தினங்களே உள்ளதால், தேர்வுக்கான ஏற்பாடுகளில்கல்வித்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.தேர்வு நடக்கும் மையங்கள், தேர்வு அறைகளின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை, கழிப்பிடங்கள் மற்றும் குடிநீர் வசதிகுறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.பள்ளிகளில் அனைத்து இடங்களிலும் துண்டு காகிதங்கள் எதுவுமின்றி, சுத்தப்படுத்தவும், பயன்பாடு இல்லாத வகுப்பறைகளைபூட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்குள் அன்னிய நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு மையத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பில் ஈடுபடஉள்ளனர்.தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.அப்போது, தேர்வு பணி நியமன உத்தரவு தரப்படும். தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கான எழுது உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி