செப்., 30 தேதி அரசு விடுமுறை இல்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2013

செப்., 30 தேதி அரசு விடுமுறை இல்லை.

வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பதற்காக, செப்., 30ம்தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை, ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆண்டு தோறும், பண்டிகைகள், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களுக்கு, அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.இதில், ஆண்டு தோறும், செப்., 30ம் தேதி, வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிவதால், வர்த்தக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த விடுமுறையை, அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டாம் என, மத்திய அரசின் நிதித்துறை, மாநில அரசுகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தது. இதை ஏற்று, வங்கிகளின் அரையாண்டு கணக்கு முடிப்பிற்காக, அறிவிக்கப்பட்ட, செப்., 30ம் தேதியை, அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி, விடுமுறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை, வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி