பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி தமிழக முதல்வர் உத்தரவு. புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக திரு. வைகை செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2013

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி தமிழக முதல்வர் உத்தரவு. புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக திரு. வைகை செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. சிவபதி, சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜய் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திருமதி. கோகுல இந்திரா ஆகியமூன்று அமைச்சர்களை நீக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புதிய அமைச்சர்களாக திரு. வைகை செல்வன் அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கி முதல்வர் உத்தரவு.சுகாதாரத்துறை அமைச்சராக திரு. கே.சி.வீரமணி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.பூனாட்சி கதர் கிராம தொழில்துறை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய அமைச்சர்கள் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில்  பதவியேற்க உள்ளனர்.நாளை பதவியேற்க உள்ள அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி