ஹால்டிக்கெட் பெறுவதில் மாணவர்கள் கடும் அவதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2013

ஹால்டிக்கெட் பெறுவதில் மாணவர்கள் கடும் அவதி.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 2 தனித் தேர்வாளர்களுக்கான, ஹால்டிக்கெட் புறநகரில் உள்ள பள்ளியில் வைத்து வழங்குவதால் மாணவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் முதல் தேதிதுவங்குகிறது. பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய மூன்று தாலுகாவை உள்ளடக்கிய பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், இத்தேர்வுக்கு 500க்கும் மேற்பட்ட தனித்தேர்வாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஹால்டிக்கெட், பொள்ளாச்சிஅடுத்த ஏ.நாகூர் மத்திய மேல்நிலைப்பள்ளியில் மட்டும் வினியோகிக்கப்படுகிறது.பொள்ளாச்சி நகருக்குள் பள்ளிகள் இருந்தும் ஆண்டுதோறும், பிளஸ் 2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் அனைத்தும், 15 கி.மீ., தூரம் தொலைவில் உள்ள பள்ளியில் வழங்கப்படுகிறது. இப்பள்ளி, புறநகர் பகுதியில் திருப்பூர் மாவட்ட எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. பள்ளிக்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லாததால்,வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை, கோட்டூர் உட்பட சுற்றுப்புறபகுதிகளை சேர்ந்த தனித்தேர்வாளர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.தனித்தேர்வாளர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கும் மையத்தை மாற்றிஅமைக்க வேண்டும், என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் கல்வித்துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால், மாணவர்களும், பெற்றோர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்."உடனடியாக, இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்" என, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கும் மையங்கள் குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில்இருந்து முடிவு செய்யப்படுகிறது. இதில், கல்வித்துறை அதிகாரிகளின் தலையீடு எதுவும் இல்லை. பல ஆண்டுகளாக, இதே பள்ளிதான் ஹால்டிக்கெட் மையமாக தேர்வு செய்யப்படுகிறது.மாணவர்களின் தற்போதைய நிலை குறித்து தேர்வுத்துறைக்கு அறிவுறுத்தி, மாற்று மையம் அனுமதிக்க பரிந்துரை செய்யப்படும். தேர்வுகளை பொறுத்தவரை, தேர்வுத்துறையின் முடிவே இறுதியானது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி