பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்கும் தொலைதொடர்பு குறித்த சான்றிதழ் படிப்புகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2013

பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்கும் தொலைதொடர்பு குறித்த சான்றிதழ் படிப்புகள்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் இரண்டு மாத கால ஆன்லைன் சான்றிதழ் படிப்பை வழங்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இண்டர்நெட் போர்ட்டல், நெட்வொர்க்கிங் மற்றும் சைபர் பாதுகாப்பு, மொபைல் தகவல் தொடர்பு, பிராட்பேண்ட் தொழில்நுட்பம், ஆப்டிகல் ஃபைபர் சிஸ்டம்ஸ், டிஜிட்டல் ஸ்விட்சிங் மற்றும் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ், தொலைத்தொடர்புக்கு தேவையான உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிகளின் கீழ் இந்த ஆன்லைன் சான்றிதழ் படிப்பை பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்குகிறது.மாணவர்கள், தொலைதொடர்புத் துறையில் வேலை தேடுபவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெற முடியும். செய்முறை பயிற்சியும் இந்த படிப்பில் வழங்கப்படுகிறது. வார விடுமுறை நாட்களில், பலகோடி ரூபாய் மதிப்புடைய இயந்திரங்களின் உதவியுடன் செய்முறைப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.ஆன்லைன் சான்றிதழ் வகுப்புக்கான கட்டணம் விவரங்கள்:பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்கும் தொலைதொடர்பு குறித்த இரண்டு மாத கால ஆன்லைன் சான்றிதழ் வகுப்புக்கான கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.இரண்டு மாத கால அளவிலான இந்த ஆன்லைன் சான்றிதழ் படிப்புக்கான கல்விக் கட்டணம் 5,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக அறிமுகப்படுத்தப் படுவதால், அறிமுகச் சலுகையாக கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும்.முதல் பேட்ச்-க்கான வகுப்புகள் பிப்ரவரி 25-ஆம் தேதி தொடங்குகிறது. செய்முறைப் பயிற்சிகள் சென்னை மறைமலை நகர், பெரியார் சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள சென்னை தொலைபேசியின் மண்டல பயிற்சி மையத்திலும், மேலும் சில மையங்களிலும் நடத்தப்படும். இந்த சான்றிதழ் வகுப்பு குறித்த கூடுதல் விவரங்களை www.learntelecom.bsnl.co.inஎன்ற இணைய தளத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி