அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஊழியர் பற்றாக்குறை: கேள்விக்குறியான கல்வித்தரம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2013

அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஊழியர் பற்றாக்குறை: கேள்விக்குறியான கல்வித்தரம்.

ராமநாதபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில், காப்பாளர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் நீண்ட நாட்களாக காலியாக உள்ளதால், மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு, பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.ராமநாதபுரம் அரண்மனை அருகே மாவட்ட அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பெற்றோரை இழந்த குழந்தைகள், தாய்அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் அரசு உதவியுடன் தங்கி படித்து வருகின்றனர். தற்போது, 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். சமூக நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த காப்பகத்தில், காப்பாளர், கணக்கர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர் மற்றும் வாட்ச்மேன் உள்ளிட்ட பணியிடங்கள், நீண்ட நாட்களாக காலியாக உள்ளது.இதனால் மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களின்பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. மாணவிகளை கண்காணிப்பதிலும், காப்பகம் தொடர்பான கடிதப்போக்குவரத்து, ஆவணங்கள், கணக்கு வழக்குகளை சரிபார்ப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாணவிகளின் எதிர்கால நலன் கருதி காலிப்பணியிடங்களை நிரப்ப, சமூகநலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி