முடங்கி கிடக்கும் பள்ளி மாணவர்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2013

முடங்கி கிடக்கும் பள்ளி மாணவர்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம்.

பள்ளி மாணவர்களுக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக, "ஜல்மானி" என்ற திட்டத்தை, மத்திய அரசு, 2009 -2010 ல், துவக்கியது.சிவகங்கை மாவட்டத்தில், முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. முதற் கட்டமாக சில பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்த, தலா 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. குடிநீர் வாரியம் மூலம், இந்தபணி மேற்கொள்ளப்பட்டது. "படிப்படியாக, அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் இயந்திரம் பொருத்தப்படும்" என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், 2011- 2012ல் இருந்து,"ஜல்மானி" திட்டத்திற்கு, நிதி ஒதுக்கவில்லை.இதனால், திட்டம் முடங்கிக் கிடக்கிறது. ஏற்கனவே, இயந்திரம் பொருத்தப்பட்ட பள்ளிகளிலும் பழுதடைந்து கிடக்கின்றன. இவற்றையும், கல்வித்துறை சீர்படுத்தவில்லை. இத்திட்டத்திற்குபுத்துயிர் வழங்கி, மாணவர்களுக்கு, சுத்திகரித்த குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.குடிநீர் வாரிய அதிகாரி கூறுகையில், "குடிநீர் இயந்திரம் வழங்குவதற்காக, 2012க்கு பின், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால், பள்ளிகளில் இயந்திரங்களை பொருத்தவில்லை" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி