கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஹால்டிக்கெட் வழங்குவதில் சிக்கல் - நாளிதழ் செய்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2013

கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஹால்டிக்கெட் வழங்குவதில் சிக்கல் - நாளிதழ் செய்தி

"தத்கால்" திட்டத்தில் விண்ணப்பித்த பிளஸ் 2 தனித் தேர்வர்கள், ஹால் டிக்கெட் பெற, டி.பி.ஐ., வளாகத்தில், குவிந்தனர். ஒரே நாளில், அதிக மாணவ, மாணவியர் திரண்டதால், ஹால் டிக்கெட் பெற முடியாமல், அவதிக்குள்ளாயினர்.மார்ச் மாதம், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, தனித்தேர்வாக எழுத, தத்கால் திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்களுக்கு, நேற்றும், இன்றும், ஹால் டிக்கெட் வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்திருந்தது. டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்தில், நேற்று ஒரே நாளில், 1000 மாணவ, மாணவியர் குவிந்தனர். இவர்களுக்கு, ஹால் டிக்கெட் வழங்க, நான்கு கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தபோதும், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு, கூட்டம் திரண்டதால், ஹால் டிக்கெட் வழங்குவதில், பிரச்னை ஏற்பட்டது.ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் மாணவ, மாணவியரை கட்டுப்படுத்தி, வரிசையில் நிற்க வைக்க முயற்சித்தார். அது நடக்கவில்லை. இதனால், அவர் சோர்ந்துபோய், ஓரங்கட்டினார். கடைசி நேரத்தில், அவசரம், அவசரமாக ஹால் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்ததுதான் பிரச்னைக்கு காரணம் என, தேர்வர்கள் தெரிவித்தனர்.ஒரு நாளைக்கு, 300 பேர் வீதம், 4,5 நாட்கள் வழங்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும் எனவும், அவர்கள் தெரிவித்தனர்.ஆனால், இதற்கெல்லாம் கால அவகாசம் இல்லை என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி