ஆசிரியர் நியமனத்திற்கு போலீஸ் நற்சான்றிதழ் தேவை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2013

ஆசிரியர் நியமனத்திற்கு போலீஸ் நற்சான்றிதழ் தேவை.

ஆசிரியர் நியமனத்திற்கு, போலீசாரிடமிருந்து நற்சான்றிதழ் கடிதம் பெற்று வந்தால் மட்டுமே சாத்தியம்" என்ற நடைமுறையை அறிமுகப்படுத்த, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.இதனால், ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பள்ளிக்கூடத்தில், மாணவ மாணவியரை, கண்டிப்பு என்ற பெயரில், ஆசிரியர்கள் பிரம்பால் அடித்தோ, உடல்ரீதியாக துன்புறத்தவோ கூடாது என, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன், பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை அமல்படுத்தும் முகமாக, ஆந்திராவில், ஆசிரியர்கள் நியமனத்தில், புது நடைமுறையை கொண்டு வர, மாநில அரசு முடிவு செய்துள்ளது.அரசு ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், இதற்கு முன் வேலை பார்த்தஇடங்களில், எப்படி நடந்து கொண்டார்; வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்காக, போலீசாரிடம் இருந்த சான்றிதழ் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், போலீசாரிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் இருந்தால் தான், நியமனம் வழங்கப்படும் என, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது: ஆசிரியர்கள் பொறுப்பு பற்றியும், அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை, ஆண்டுதோறும் பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். இதில் தவறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, குழந்தைகள் உரிமைபாதுகாப்புக்கான தேசிய கமிஷன் வலியுறுத்தியுள்ளது. ஆனால், மாநில அரசு இதற்கு, மாறாக நடந்து கொள்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.பள்ளி கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில், "மாணவர்களை அடித்துதுன்புறுத்தாத ஆசிரியர்களை, மாணவர்கள் எதிர்காலம் கருதி தேர்வு செய்வதற்கு இது சிறந்த வழி. ஆசிரியர்களின் முந்தைய கால வரலாற்றின் மூலமே, தண்டிக்காத ஆசிரியர்களை தேர்வு செய்ய முடியும்" என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி