Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக கணக்கிடப்படுமா?

0 Comments

தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்த காலத்தை பணிக்காலமாக கணக்கீட வேண்டும் என்று நிரந்தரம் செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களின் கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.பள்ளி கல்வித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டி கடந்த2003ஆம் ஆண்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமனம்செய்யப்பட்டனர்.இவர்களுக்கு மாதம் தோறும் மூவாயிரம் முதல் நான்காயிரத்து ஐநூறு ரூபாய் வரை தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 01.06.2006 முதல் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் தொகுப்பு ஊதிய காலத்தை பணிக்காலமாக கணக்கீடு செய்ய பல முறை கோரிக்கை வைத்தும், போராடியும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. இதேபோல் தொகுப்பூதியத்தில் 1990 முதல் 1992 வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிப்பலனோடு பணப்பலனும் அளிக்கப்பட்டது.  "எங்களுக்கு பணப்பயன் தேவையில்லை குறைந்தபட்சம் பணிப்பயனை அளித்தால் போதும்" என்றும், இவ்வாறு அளிக்காமல் போனால், தேர்வு நிலை மற்றும் பணிமூப்பு பாதிக்கப்படும் எனவும் தெரிவிகின்றனர். மேலும் புதிய பென்சன் திட்டத்தில் இவர்களை இணைத்து மாதம் தோறும் ஒரு கணிசமான தொகையும் கடந்த பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது பென்சன் திட்டத்தில் வசூலிக்கப்படும் பணம் எந்த கணக்கில் உள்ளது என்பது இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கே தெரியாதநிலை தொடர்கிறது.எனவே புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். தேர்வு நிலை பெறவும், பணி மூப்பு பாதிக்காமல் இருக்கவும் தொகுப்பு ஊதியத்தில் பணி செய்த மூன்றாண்டு காலத்தை பணிகாலமாக அறிவிக்கவேண்டும். மேலும் பிற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஜிபிஎப் கடன் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென காலமுறை ஊதியம் பெறும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கல்லூரிகள் திறப்பு எப்போது? கையைப் பிசைகிறது கல்வித்துறை.

0 Comments

தமிழகம் முழுவதும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளை எப்போது திறப்பது என, தெரியாமல், உயர்கல்வித்துறை கையை பிசைந்து வருகிறது. அரசுத் தரப்பில் இருந்து, நேற்று மாலை வரை, உயர்கல்வித் துறைக்கு, எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், நாளை கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என தெரிகிறது.இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இம்மாத ஆரம்பத்தில் இருந்து, கல்லூரி மாணவர்கள், தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். படிப்படியாக, அனைத்து மாவட்டங்களிலும், போராட்டம் பரவியதால், கடந்த 15ம் தேதி, அரசுகலை, அறிவியல் கல்லூரி களுக்கு, கால வரையற்ற விடுமுறையை, உயர்கல்வித் துறை அறிவித்தது.இதற்கிடையே, பொறியியல் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்ததால், அவர்களுக்கும், 18ம் தேதி முதல், கால வரையற்ற விடுமுறையை, அரசு அறிவித்தது. எனினும், மாணவர்கள் ஆங்காங்கே, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், ""மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்" என, சட்டசபையில், முதல்வர் கேட்டுக் கொண்டார். இதனால், நாளை (ஏப்ரல்1) முதல், கல்லூரிகள் திறக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வரை, கல்லூரிகள் திறப்பு தொடர்பாக, அரசுத் தரப்பில் இருந்து, உயர்கல்வித் துறைக்கு, எவ்வித தகவலும் வரவில்லை. இதனால், நாளை, கல்லூரிகள் திறப்பதற்குவாய்ப்பு இல்லை என, கூறப்படுகிறது.அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது: ஏப்ரல் 1ம் தேதி, கல்லூரி திறப்பது தொடர்பாக, சனிக்கிழமை மாலை வரை, அரசிடம் இருந்து, எந்த உத்தரவும் வரவில்லை. 1ம் தேதி, கல்லூரிகள் திறக்க வேண்டும் எனில், இரண்டு நாள் முன்கூட்டியே, அறிவிப்பை வெளியிட வேண்டும். அப்போது தான், சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கும் மாணவ, மாணவியர், கல்லூரிகளுக்கு திரும்ப வசதியாகஇருக்கும்.முதல் தேதி இல்லாவிட்டாலும், அடுத்த ஒரு சில நாட்களில், கல்லூரியை திறந்து விட்டால், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் ஒரு வாரம் தள்ளிப் போனால், அடுத்த, பருவத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டியது வரும். இவ்வாறு, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.பொறியியல் மாணவர்களுக்கு, மே மாதம், அடுத்த செமஸ்டர் தேர்வுகள் நடக்க உள்ளன. இதற்கான பாடங்களை, உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். இரு வாரங்களாக விடுமுறை இருப்பதால், குறித்த காலத்திற்குள், பாடத் திட்டங்களை முடிக்க முடியாத நிலை, ஆசிரியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.இதனால், கல்லூரி திறக்கப்பட்டதும்,அனைத்து சனிக்கிழமைகளிலும், வகுப்புகளை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும், பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒன்றரை மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் அக மதிப்பீடு தேர்வும், தள்ளிப் போகலாம்.மாநிலம் முழுவதும், 550 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், 65க்கும் மேற்பட்ட,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால், அங்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரிகள் திறப்பு தேதியை அறிவிக்காததால், உயர்கல்வித் துறை, கையை பிசைந்து வருகிறது.மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, தமிழக அரசு, விரைவில், கல்லூரி திறப்பு தேதியை அறிவிக்க வேண்டும் என, உயர்கல்வி வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

ஊழியர்கள் பற்றாக்குறை: அரசு தேர்வுத்துறை திணறல்.

0 Comments

தேர்வுத் துறையையும், இதனோடு சம்பந்தப்பட்ட அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தையும் (டேட்டா சென்டர்) வலுப்படுத்த, தமிழகஅரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரு துறை வட்டாரங்களும் எதிர்பார்க்கின்றன. இல்லை எனில், வரும் ஆண்டுகளில், இந்த இரு துறைகளிலும், பெரிய குளறுபடிகளும், குழப்பங்களும் ஏற்பட்டுவிடும் என, துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தேர்வுத்துறை இயக்குனரகம், 1975ல் ஏற்படுத்தப்பட்டபோது, எத்தனை பணியிடங்கள் ஒதுக்கப்பட்டதோ, அதே பணியிடங்கள் தான், இன்றைக்கும் இருக்கின்றன. இயக்குனரகம் மற்றும் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் சேர்த்து, ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 500. இதில், 120 பணியிடங்கள், காலியாக இருக்கின்றன.கடந்த 98ல், பிளஸ் 2 தேர்வை, 3.63 லட்சம் மாணவர்களும், 10ம் வகுப்பு தேர்வை, ஐந்து லட்சம் பேரும் எழுதினர். ஆனால், நடப்பு ஆண்டில், பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் பேரும் எழுதுகின்றனர். பிளஸ் 2 மாணவர் எண்ணிக்கை, மூன்று மடங்கும், 10ம் வகுப்பு மாணவர் எண்ணிக்கை, இரு மடங்கையும் தாண்டிவிட்டது.மேலும், ஆசிரியர் பயிற்சி தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, எட்டாம் வகுப்பு தனித்தேர்வு என, ஆண்டுக்கு, 20க்கும் மேற்பட்ட தேர்வுகளை, தேர்வுத்துறை நடத்தி வருகிறது. அனைத்து தேர்வுப் பணிகளும், ஆண்டு முழுவதும் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு ஏற்ப, துறையை வலுப்படுத்தவோ, காலி இடங்களை நிரப்பவோ, கூடுதலாக புதிய பணியிடங்களை ஏற்படுத்தவோ, தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது, துறை அலுவலர்களின் குற்றச்சாட்டு.கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ச்சியாக ஏற்படும் குளறுபடிகள் காரணமாக, தேர்வுத்துறை திணறி வருவதாகவும், அவர்கள் கூறுகின்றனர். கடந்த 28ம் தேதி நடந்த 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், ஐந்து மதிப்பெண்களுக்கு உரிய விடைகளை நிரப்ப தேவையான வங்கி செலானை, மாணவர்களுக்கு வழங்காதது, இதுவரை நடந்த குளறுபடிகளில், உச்சகட்டமாக உள்ளது.கேள்வித்தாள் அச்சடிப்பது, வினியோகம் உள்ளிட்ட பணிகளை, வேறு யாரிடமும் ஒப்படைக்காமல், இயக்குனரே, நேரடியாக கவனிப்பதாக, துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், "தனக்கும் எதுவும் தெரியவில்லை;இனிமேல் தான் விசாரிக்க வேண்டும்" என, இயக்குனர் வசுந்தராதேவி கூறுவது, விந்தையாக உள்ளது.தேர்வுத்துறை நிலை இப்படி என்றால், இந்த துறையோடு சம்பந்தப்பட்ட, டேட்டா சென்டரின் நிலைமை, இன்னும் மோசமாக உள்ளது. இந்த மையம், நிதித்துறையின் கீழ் இருக்கிறது. ஆனால், கல்வித்துறை பணிகளை செய்து வருகிறது. "தம் துறை பணிகள் நடக்காதபோது, நாம் ஏன் கண்டுகொள்ள வேண்டும்" என்ற மன நிலையில், நிதித்துறையும், "பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படாத போது, நாம் என்ன செய்ய முடியும்" என்ற நிலையில், கல்வித்துறையும் உள்ளன.இந்த பிரச்சனையை தீர்க்க, டேட்டா சென்டரை, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவந்து, இந்த மையத்தை வலுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துறை அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த மையத்தில், வெறும் ஏழு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் தான் உள்ளனர். 40க்கும் மேற்பட்டபணியிடங்கள் காலி. தகவல்களை தொகுத்து, மேற்பார்வையிடும் அதிகாரிகள் நிலையில், மூன்று பணியிடங்கள் காலி. இந்த பதவியில் கூட, ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்துள்ளனர்.கம்ப்யூட்டர்களும், தொழில்நுட்பங்களும், மிக, மிக பழமையானவை என, துறை ஊழியர்கள் வேதனைப்படுகின்றனர். நடப்பு ஆண்டில், மதிப்பெண்களை தொகுக்கும் பணிக்காக, 70 பேரை, ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்துள்ளனர். ஒரு மதிப்பெண் சான்றிதழுக்கு, ஒரு ரூபாய் என்ற வீதத்தில், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த வகையில், 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக, டேட்டா சென்டர் செலவழிக்க உள்ளது. மாணவர்களின் மதிப்பெண்களை தொகுக்கும்பணியில், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்வது, நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்குமா என, தெரியவில்லை.டி.என்.பி.எஸ்.சி.,-டி.ஆர்.பி., போன்ற அமைப்புகள், விடைத்தாள்களை, "ஸ்கேன்" செய்து, நவீன முறையில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, மிக விரைவாக, தேர்வு முடிவுகளை வெளியிடுகின்றன. அதேபோன்ற தொழில்நுட்பத்தை, தேர்வுத்துறையிலும் புகுத்த வேண்டும் என, துறை அலுவலர்கள் வலியுறுத்துகின்றனர்.

கலை அறிவியல் கல்லூரிகளில் இலவச கல்வி: சென்னை பல்கலை அறிவிப்பு.

0 Comments

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள, கலை, அறிவியல் கல்லூரிகளில், இலவசமாக கல்வி கற்க, சென்னை பல்கலைக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து, பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை பல்கலைக்கழகம், மாணவர் இலவச கல்வி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் உள்ள, சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும், ஒவ்வொரு கல்லூரிகளிலும், ஐந்து மாணவர்கள், இத்திட்டத்தில், இலவசமாக கல்வி பெறலாம். முதல் தலைமுறை பட்டப்படிப்பு மாணவர்கள், ஆதரவற்றோர், விவசாய கூலி வேலைசெய்யும் பெற்றோரின் குழந்தைகள், கைம்பெண், கணவரால் கைவிடப்பட்டபெண்ணின் குழந்தைகளுக்கு, முன்னுரிமை வழங்கப்படும்.பெற்றோர் வருமானம், 2 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை, மாணவர்கள், சென்னை பல்கலைக் கழகத்திலோ, பல்கலை இணைய தளத்திலிருந்தோ, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட உடன், பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை, குறிப்பிட்டுள்ள சான்றுகளுடன், 10 நாள்களுக்குள், பல்கலைக் கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். இத்திட்டத்தில் தேர்ந்து எடுக்கப்படும் மாணவர்கள், அந்தந்த பகுதியில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்க, வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்டு உறைவிட பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றுவதற்கு உத்தரவு.

0 Comments

தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், செயல்பட்டு வந்த சிறப்பு உண்டு, உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணவர்களை, வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிக்கும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 25 சிறப்பு உண்டு, உறைவிட பள்ளிகள், கடந்த 7 ஆண்டுக்கும் மேலாக, இயங்கி வருகின்றன. அவற்றில் தங்கி, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள்பயின்று வந்தனர்.இவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் அனைத்தும் வழங்கப்பட்டது. இந்த நிதி ஆண்டில், இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், ஏப்.,1 முதல், உண்டு. உறைவிட பள்ளிகளை மூடிவிடும்படி, மாவட்டதிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு பயிலும், மாணவர்களை, அவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள"ரெகுலர்' பள்ளியில் சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவர் கூறியதாவது: "ரெகுலர்' பள்ளிகளில் சேர்க்கும்போது, இரவில் தங்க வைக்க முடியாது. "ரெகுலர்' பள்ளி மாணவர்களின், படிப்பு வேகத்துக்கு, மாற்றுதிறனாளி மாணவர்கள் ஈடு கொடுக்க முடியாது. அவர்களை பராமரிக்க உதவியாளர் இன்றி, அவதிப்படும் நிலை ஏற்படும்.வழக்கமான ஆசிரியர்களே பாடம் நடத்துவதால், மாற்று திறனாளி மாணவர்களின் "சைகை' ஆசிரியர்களுக்கு புரியாது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை, அவர்களின் பெற்றோர், காலையில் பள்ளிக்கு அழைத்து வரவும், மாலையில் அழைத்து செல்லவும் முடியாததால், அவர்களின் கல்வி முடங்கும் நிலை உருவாகும், என்றார்.

இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு.

0 Comments

பள்ளி கல்வித் துறையில், 176 இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். நேரடி தேர்வு மூலம், உதவியாளர் பணியிடம் தேர்வு செய்யப்படுவது இல்லை. இளநிலை உதவியாளர்களில் இருந்து, பணிமூப்பு அடிப்படையில், உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, பள்ளி கல்வித்துறையில், 176 இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களாக, பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, "ஆன்-லைன்'முறையில், இன்று நடந்தது. பணிமூப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு, கலந்தாய்வு நடத்தி, முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில், பணி நியமனம் செய்யப்பட்டனர்.  ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறையில், 15 முதல்வர் பணியிடங்கள் காலியாக இருந்தன. முதுநிலை விரிவுரையாளர்களில், பணிமூப்பு தகுதி வாய்ந்த, 15 பேர், முதல்வர்களாக , பதவி உயர்வு செய்யப்பட்டனர். இந்த கலந்தாய்வும், ஆன்-லைன் வழியில் நடந்தது.

பாதிக்கப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் முதல்தாள் அடிப்படையில் மதிப்பெண்.

0 Comments

பத்தாம் வகுப்பு விடைத் தாள்கள் ரயில் தண்டவாளத்தில் விழுந்து சேதமடைந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழ் முதல் தாள் மதிப்பெண் அடிப்படையில் இரண்டாம் தாளுக்கு மதிப்பெண் வழங்க அரசு தேர்வுத் துறை முடிவெடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு கிடையாது என்றும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.கடந்த வியாழக்கிழமை தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. கடலூர் மாவட்டம் பி.முட்லூரில் அரசுப் பள்ளி மையத்தில் மாணவர்கள் எழுதிய விடைத் தாள்கள் 3 கட்டுகளாகக் கட்டப்பட்டுவிருத்தாச்சலம் ரயில் நிலையத்திலிருந்து திருச்சிக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சியில் தேர்வுத் தாள் கட்டுகள் இறக்கும்போது, ஒரு கட்டு காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விருதாச்சலம் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் விருத்தாச்சலம் ரயில் தண்டவாளத்தில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது விடைத்தாள் கட்டு தண்டவாளத்தில் விழுந்திருப்பதும், சில விடைத் தாள்கள் சிறு, சிறு துண்டுகளாக கிழிந்து சேதமடைந்திருப்பதும் தெரியவந்தது.சேதமடைந்த விடைத் தாள்கள் சனிக்கிழமை சென்னைக்கு கொண்டுவரப்பட்டன. அதை அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் வசுந்தரா தேவி கூறியது: தண்டவாளத்தில் விழுந்த கட்டில் 357 விடைத் தாள்கள் இருந்துள்ளன. இதில் குறிப்பிட்ட அளவிலான விடைத் தாள்கள் மட்டுமே சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட மாட்டாது. இவர்கள் எழுதியுள்ள தமிழ் முதல் தாள் விடைத் தாளை அடிப்படையாகக் கொண்டு, சேதமடைந்த இரண்டாம் தாளுக்கு மதிப்பெண் வழங்கப்படும். ஒருவேளை தமிழ் முதல் தாளில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்தால் சேதமடைந்த இரண்டாம் தாளுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் கொடுக்கப்படும். எனவே, மாணவர்களும், பெற்றோரும் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

ஐஐடிக்களில் 43% காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள்.

0 Comments

ஐஐடி மற்றும் என்ஐடிக்களில் 40 சதவீதத்துக்கு மேல் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கல்வித் தரம் முன்னேறி வந்தாலும், உலக அளவில் போட்டி போடும் அளவுக்கு இன்னமும் வளரவில்லை. உலக அளவில் மாணவர்களை தயார் படுத்த உருவாக்கப்பட்டவையே ஐஐடி மற்றும் என்ஐடிக்கள். ஆனால், அவையும் எதிர்பார்த்த முன்னேற்றத்தைத் தரவில்லை.இந்த நிலையில், ஐஐடி மற்றும் என்ஐடிக்களில் 40 சதவீதத்துக்கும் மேல் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது புதிதாக துவங்கப்பட்ட ஐஐடிக்களில் அல்ல. துவங்கி பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஐஐடிக்களுக்கும் இதே நிலைதான். இதிலும் என்ஐடிக்களின் நிலை மிகவும் மோசம். இங்கு 57 சதவீதம் அளவுக்கு பேராசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உளளது. பொதுவாக மாணவர்கள் புதிய ஐஐடிக்களை விட, பழைய ஐஐடிக்கள் தான் கல்வியைநல்ல முறையில் தரும் என்று நம்புவார்கள். இந்த நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில், தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட 8 ஐஐடிக்களில் 4ல், போதிய பேராசிரியர்கள் பணியாற்றி நல்ல முறையில் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐடிக்களில் 43% காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள்.

0 Comments

ஐஐடி மற்றும் என்ஐடிக்களில் 40 சதவீதத்துக்கு மேல் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கல்வித் தரம் முன்னேறி வந்தாலும், உலக அளவில் போட்டி போடும் அளவுக்கு இன்னமும் வளரவில்லை. உலக அளவில் மாணவர்களை தயார் படுத்த உருவாக்கப்பட்டவையே ஐஐடி மற்றும் என்ஐடிக்கள். ஆனால், அவையும் எதிர்பார்த்த முன்னேற்றத்தைத் தரவில்லை.இந்த நிலையில், ஐஐடி மற்றும் என்ஐடிக்களில் 40 சதவீதத்துக்கும் மேல் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது புதிதாக துவங்கப்பட்ட ஐஐடிக்களில் அல்ல. துவங்கி பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஐஐடிக்களுக்கும் இதே நிலைதான். இதிலும் என்ஐடிக்களின் நிலை மிகவும் மோசம். இங்கு 57 சதவீதம் அளவுக்கு பேராசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உளளது. பொதுவாக மாணவர்கள் புதிய ஐஐடிக்களை விட, பழைய ஐஐடிக்கள் தான் கல்வியைநல்ல முறையில் தரும் என்று நம்புவார்கள். இந்த நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில், தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட 8 ஐஐடிக்களில் 4ல், போதிய பேராசிரியர்கள் பணியாற்றி நல்ல முறையில் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதியார் பல்கலையில் நாளை பி.எட்., நுழைவுத்தேர்வு.

0 Comments

கோயம்பத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில். பி.எட்., நுழைவுத்தேர்வு நாளை நடைபெறுகிறது.பாரதியார் பல்கலையில் பி.எட்., படிப்பில் சேர நுழைவுத்தேர்வுநடத்தப்படுகிறது. அதன்படி நாளை கடலூர், வில்லுபுரம், தஞ்சாவூர், நாகர்கோவில், திருநெல்வேலி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.நுழைவுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஏற்கனவே, அவரவர்வீட்டு முகவரிக்கு நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்பவர் அரை மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு அறைக்கு வர வேண்டும் என்று பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது. மேலும் தகவல்கள் அறிய பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

கல்வி அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை.

0 Comments

விருத்தாசலம் அருகே விடைத்தாள்கள் ரயில் தண்டவாளத்தில் கிடந்த விவகாரம் தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறும்போது, விடைத்தாள்கள் ரயில் தண்டவாளத்தில் கிடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்துள்ளது.இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி கடலூர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோனிராஜ், மாவட்டக் கல்வி அலுவலர் வடிவேலு ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அவர்கள் இப்போது சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த அறிக்கை விரைவில் எனக்கு கிடைக்கும். அதன்அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற துரதிருஷ்டவசமான நிகழ்வுகளில் கடந்த காலங்களில் எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதைப் போன்றே தற்போதும் மாணவ-மாணவிகளுக்குப் பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.விடைத்தாள் எரிந்த விவகாரம்: 2008 ஏப்ரல் 24-ம் தேதிஇரவு வேலூர் ஊரிசு மேல்நிலைப் பள்ளி விடைத்தாள் திருத்தும் மையத்தில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதில் அங்கு திருத்துவதற்காக வைத்திருந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களின் 52,020 விடைத்தாள்கள் எரிந்து சாம்பலாகின. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் நேரில் சென்று விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்தார். பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படவில்லை. மாறாக அவர்கள் அரையாண்டுத் தேர்வில்பெற்றிருந்த சராசரி மதிப்பெண் கணக்கிடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives