பள்ளி கல்வி துறையில் 100 பேருக்கு பதவி உயர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2013

பள்ளி கல்வி துறையில் 100 பேருக்கு பதவி உயர்வு.

பள்ளி கல்வித் துறையில், இருக்கை கண்காணிப்பாளர்கள், 100 பேர், கண்காணிப்பாளர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர்.மாவட்ட கல்வி அலுவலகங்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில், இருக்கை கண்காணிப்பாளர்களாக, பணியாற்றி வருபவர்களில், பணிமூப்பு அடிப்படையில், 100 பேர், கண்காணிப்பாளர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர். இதற்கான கலந்தாய்வு, "ஆன்-லைன்" முறையில், நடந்தது. துறை இணை இயக்குனர் கண்ணப்பன் கையெழுத்திட்ட உத்தரவு கடிதங்கள், உடனுக்குடன், ஆன்-லைன் மூலம், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, உதவியாளர்களாக இருப்பவர்களில், 100 பேர், இருக்கை கண்காணிப்பாளர்களாக, பதவி உயர்வு செய்யப்படுவர்என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி