தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர் களாக பணிபுரிபவர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2013

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர் களாக பணிபுரிபவர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு.

தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரங்களை உரிய படிவத்தில் அளிக்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவில் கூறியிருப்பதாவது:ஊராட்சி ஒன்றிய / நாகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களின் ஒன்றிய வாரியான எண்ணிக்கை விவரங்களை உரிய படிவங்களில் 26.03.2013 தேதியன்று தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அளித்திட அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.மேலும் இது சார்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்றவர்களில் தீர்ப்பாணையின் நகலினையும் கொண்டு வர அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:

  1. dear sir I am muralitharan from coimbatore D.T .Ed is equal to +2 the judgement was given .But those who studied 10+D T Ed +degree B.Ed are not eligible to get B.T promotion and middle school H M promotion .wat about court judgement? Is there any G O So many teachers are waitting for you sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி