பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நாளை துவங்குகிறது; 10.68 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். கடந்த, 1ம்தேதியில் இருந்து, நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், நாளையுடன் முடிகின்றன. இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடக்கின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், 5 லட்சத்து, 43 ஆயிரத்து, 152 பேர் மாணவர்கள்; 5 லட்சத்து, 25 ஆயிரத்து, 686 பேர் மாணவியர். 3,012 மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன. சென்னையில், 222 மையங்களில் நடக்கும் தேர்வில், 58 ஆயிரத்து, 436 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களில், 29 ஆயிரத்து, 101 பேர், மாணவர்; 29 ஆயிரத்து, 335 பேர், மாணவியர். தேர்வு நடக்கும் தேதிகள் விவரம்: 27.3.13 - தமிழ் முதற்தாள்28.3.13 - தமிழ் இரண்டாம் தாள் 1.4.13 - ஆங்கிலம் முதற்தாள் 2.4.13 - ஆங்கிலம் இரண்டாம் தாள் 5.4.13 - கணிதம் 8.4.13 - அறிவியல் 12.4.13 - சமூக அறிவியல - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2013

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நாளை துவங்குகிறது; 10.68 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். கடந்த, 1ம்தேதியில் இருந்து, நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், நாளையுடன் முடிகின்றன. இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடக்கின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், 5 லட்சத்து, 43 ஆயிரத்து, 152 பேர் மாணவர்கள்; 5 லட்சத்து, 25 ஆயிரத்து, 686 பேர் மாணவியர். 3,012 மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன. சென்னையில், 222 மையங்களில் நடக்கும் தேர்வில், 58 ஆயிரத்து, 436 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களில், 29 ஆயிரத்து, 101 பேர், மாணவர்; 29 ஆயிரத்து, 335 பேர், மாணவியர். தேர்வு நடக்கும் தேதிகள் விவரம்: 27.3.13 - தமிழ் முதற்தாள்28.3.13 - தமிழ் இரண்டாம் தாள் 1.4.13 - ஆங்கிலம் முதற்தாள் 2.4.13 - ஆங்கிலம் இரண்டாம் தாள் 5.4.13 - கணிதம் 8.4.13 - அறிவியல் 12.4.13 - சமூக அறிவியல

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்விற்கு, பதிவு செய்யாத தனித்தேர்வர்களை, அறிவியலைத் தவிர, பிற பாடங்களில் தேர்வு எழுத அனுமதிக்குமாறு அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தேனி, பூதிப்புரம், ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு: என் மகன் சூர்யா, தேனி, மேலப்பேட்டை நாடார் உறவின் முறை மெட்ரிக் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்தார். உடல்நிலை சரியில்லாததால், 10ம் வகுப்பு தனித்தேர்விற்கு விண்ணப்பித்தார். தேனி முதன்மைக் கல்வி அலுவலர், "செய்முறைத் தேர்வில் பங்கேற்க, 2012 ஜூனுக்கு முன், பதிவு செய்திருக்க வேண்டும். நீங்கள் பதிவு செய்யவில்லை" எனக் கூறி, சூர்யாவின்மனுவை நிராகரித்தார். கலெக்டரிடம் மனு அளித்தோம். அவர், தேர்வு எழுத அனுமதிக்குமாறு, முதன்மைக் கல்வி அதிகாரிக்கு அறிவுறுத்தினார். முதன்மைக் கல்வி அலுவலரோ, "தேர்வுத்துறை இயக்குனர் தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார். அரசு உத்தரவு, 292ன்படி,"செய்முறைத் தேர்வில் பங்கேற்க, குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்" என்கின்றனர். அந்த உத்தரவில்,"செய்முறை தேர்வு பயிற்சியில், 80 சதவீத வருகைப் பதிவு இருக்க வேண்டும்" என, மட்டும் தான் உள்ளது; வேறு நிபந்தனைகள்இல்லை. இப்படி ஒரு நிபந்தனை உள்ளது என, தனித்தேர்வர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.அரசு உத்தரவு, 292க்கு, இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.சூர்யாவை, எழுத்துத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்காவிடில், ஓராண்டு வீணாகும். அவரை தேர்வு எழுத அனுமதிக்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார். பழனி செட்டியபட்டி வெங்கடேஸ்வரன், "என் மகள் பிரியமீனா, தனித்தேர்வு எழுத அனுமதித்து உத்தரவிட வேண்டும்" என, மற்றொருமனு செய்தார்.நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: செய்முறைத் தேர்வில் பங்கேற்க, பதிவு செய்யவில்லை என்பதை மனுதாரர்கள் ஒத்துக் கொள்கின்றனர். அறிவியல் செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வை தவிர, பிற பாடங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்குமாறு கோருகின்றனர். 2013-14 கல்வியாண்டில், அறிவியல் செய்முறைத் தேர்வில், பங்கேற்பதாக கூறுகின்றனர். அறிவியல் எழுத்து மற்றும் செய்முறை தேர்வை தவிர, மற்ற பாடங்களுக்கு தேர்வு எழுத, மனுதாரர்களை அரசு தேர்வுகள் துறை இயக்குனர், முதன்மைக் கல்வி அலுவலர் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி