10-ம் வகுப்பு கணி​தத் தேர்வு கேள்வி முறை​யில் மாற்​றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2013

10-ம் வகுப்பு கணி​தத் தேர்வு கேள்வி முறை​யில் மாற்​றம்.

10-ம் வகுப்பு கணி​தத் தேர்​வுக்கு உரிய கேள்​வி​கள் எளி​தாகஇருக்​கும் வகை​யில் புதிய கேள்வி முறையை கல்​வித் துறை வடி​வ​மைத்து அனைத்​துப் பள்​ளி​க​ளுக்​கும் சுற்​ற​றிக்கை அனுப்​பி​யுள்​ளது.​ஏப்​ரல் 5: தமி​ழ​கம் முழு​வ​தும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் புதன்​கி​ழமை ​(மார்ச் 27) தொடங்​கு​கி​றது.​ மொத்​தம் 12 லட்​சம் மாண​வர்​கள் தேர்வை எழு​த​வுள்​ள​னர்.​கணி​தத் தேர்வு வரும் ஏப்​ரல் 5-ம் தேதி நடை​பெ​று​கி​றது.​ இந்த நிலை​யில் கணி​தத் தேர்​வுக்​கான வினாத் தாளில் கேள்​வி​கள் கேட்​கும் முறை எளி​தாக அமை​யும் வகை​யில் ​ மாண​வர்​க​ளுக்​குச் சாத​க​மாக மாற்​றங்​களை கல்​வித் துறை செய்​துள்​ளது.​மாற்​றம் என்ன?​​புதிய திட்​டத்​தின்​படி "ஏ' பிரி​வில் 1 மதிப்​பெண் வழங்​கப்​ப​டும் 15 ​கேள்​வி​க​ளும் புத்​த​கத்​தில் உள்ள எடுத்​துக்​காட்டு கேள்வி மற்​றும் புத்​தக கேள்​வி​யில் இருந்தே கேட்​கப்​ப​டும்.​"பி' பிரி​வில் 2 மதிப்​பெண் கேள்​வி​க​ளில்,​​ கிரி​யேட்​டிவ்கேள்​வி​யா​க​வும் கட்​டாய ​கேள்​வி​யா​க​வும் இருந்த 30-வதுகேள்வி,​​ இப்​போது புத்​த​கத்​தில் உள்ள கேள்​வி​யாக மாற்​றப்​பட்​டுள்​ளது.​ இதற்கு பதில்,​​ கேள்வி எண் 16 முதல் 29 வரை உள்ள 2 மதிப்​பெண் கேள்​வி​க​ளில் 2 கேள்​வி​கள் கிரி​யேட்​டிவ் கேள்​வி​க​ளா​கக் கேட்​கப்​ப​டும்.​"சி' பிரி​வில் கட்​டாய கிரி​யேட்​டிவ் கேள்​வி​யாக இருந்த கேள்வி எண் 45,​ இனி புத்​த​கத்​தில் இருந்து கேட்​கப்​ப​டும்.​ அதற்கு பதில் 31 முதல் 44 வரை உள்ள கேள்​வி​க​ளில் 2 கேள்​வி​கள் கிரி​யேட்​டிவ் கேள்​வி​க​ளா​கக் கேட்​கப்​ப​டும்.​கடந்த ஆண்டி​லி​ருந்து மாறு​பட்டு,​​ இந்த ஆண்டு அனைத்​துப் பாடங்​களி​லி​ருந்​தும் கிரி​யேட்​டிவ் கேள்​வி​கள் கேட்​கப்​ப​டும்.​இந்த புதிய கேள்வி வடி​வ​மைப்பு கார​ண​மாக இந்த ஆண்டு ஏரா​ள​மானமாண​வர்​கள் கணி​தத்​தில் தேர்ச்சி பெறு​வார்​கள் என்​றும்,​​"சென்​டம்' வாங்​கும் மாண​வர்​க​ளின் எண்​ணிக்கை அதி​க​ரிக்​கும் என்​றும் எதிர்​பார்க்​கப்​ப​டு​கி​றது.​எனி​னும் இத்​த​கைய கேள்வி வடி​வ​மைப்பு மாற்​றங்​கள் குறித்து கல்வி ஆண்​டின் தொடக்​கத்​தி​லேயே மாண​வர்​க​ளுக்கு தெரி​விக்​கும் வகை​யில் கல்​வித் துறை செயல்​பட வேண்​டும் என்று தலைமை ஆசி​ரி​யர்​கள் கேட்​டுக் கொண்​டுள்​ள​னர்.​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி