பள்ளிகளில் 2வது ‘ஷிப்ட்’ அரசு பரிசீலனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2013

பள்ளிகளில் 2வது ‘ஷிப்ட்’ அரசு பரிசீலனை.

பள்ளிகளில் 2வது ஷிப்ட் நடத்த அனுமதிப்பதி பற்றி மாநில அரசுபரிசீலித்து வருகிறது. இந்த தகவலை மாநில கல்வி அமைச்சர் கிரன் வாலியா கூறினார்.இதுபற்றி நிருபர்களிடம் கிரன் வாலியா கூறியதாவது:நகரில் இருக்கும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் சார்பில்2வது ‘ஷிப்ட்’ நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. பள்ளிக்கூடங்களில் இருக்கும் கட்டமைப்பு வசதிகளை முழுமையாக பயன்படுத்த இதுபோன்ற அனுமதி கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் தங்கள் கோரிக்கையில் தெரிவித்துள்ளனர்.இதுபற்றி ஆராய மாநில அரசு சார்பில் ஏற்கனவேஒரு நிபுணர் குழு போடப்பட்டுள்ளது. அந்த நிபுணர் குழு தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்த பிறகு அந்த அறிக்கை பற்றி மாநில அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அமைச்சர் கிரன் வாலியா கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி