ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து: செய்யக் கோரி நெல்லையில் உண்ணாவிரதம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து: செய்யக் கோரி நெல்லையில் உண்ணாவிரதம்!

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் இன்று தமிழ்நாடு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.த‌மிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பாண்டியன் தலைமையில், பாளையங்கோட்டையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை, சிஎஸ்ஐ பேராயர் கிறிஸ்துதாஸ் தொடங்கி வைத்தார்.இந்த போராட்டத்தில், 'முழுமையான ஆசிரியர் பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மீண்டும் அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மொத்த பணிக் காலத்தை கணக்கில் எடுத்து தேர்வு நிலை சிறப்பு நிலை வழங்கிட வேண்டும்,10 வருடங்களுக்கு மேல் கல்வி பணி ஆற்றிவரும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கவேண்டும்" உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் அர‌சுக்கு வலியுறுத்தப்பட்டன.இந்தப் போராட்டத்தில் நெல்லை மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள்,வேலை இல்லாத பட்டதாரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி