கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற திட்டம் இல்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2013

கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற திட்டம் இல்லை.

பள்ளிக்கல்வி துறைக்கான நிதி ஒதுக்கீடு, 14 ஆயிரத்து,552 கோடி ரூபாயில் இருந்து, 16 ஆயிரத்து, 965 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டை விட, 2,413 கோடி ரூபாய், இந்த ஆண்டு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், கல்வியில் பின்தங்கிய வட மாவட்டங்களை முன்னேற்றுவதற்கு, சிறப்புதிட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.கடந்த நிதி ஆண்டில், 14 ஆயிரத்து, 552 கோடி ரூபாய் ஒதுக்கிய போதும், திட்டப் பணிகளுக்காக, வெறும், 2,694 கோடி ரூபாய் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சைக்கிள்கள், பஸ் பாஸ், சீருடைகள், புத்தகப் பை, காலணி, வரைபட புத்தகங்கள் என, பல்வேறு திட்டங்களுக்கே, பெரும்பாலான நிதி செலவானது.இந்த முறை, துறைக்கான நிதி ஒதுக்கீடு, 2,413 கோடி ரூபாய் கூடுதலாக சேர்த்து, 16 ஆயிரத்து, 956 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பள்ளி இடைநிற்றலை தவிர்ப்பதற்காக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை திட்டத்திற்காக மட்டும்,381 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம், 24.76 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர் என, நிதி அமைச்சர் தெரிவித்தார்.கழிப்பறை இழுபறி: மார்ச் இறுதிக்குள், நாடு முழுவதும் உள்ள, அனைத்து வகை பள்ளிகளிலும், முழுமையான அளவிற்கு கழிப்பறை வசதிகளும், குடிநீர் வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.இதற்கான காலக்கெடு, இன்னும், 10 நாளில் முடிய உள்ள நிலையில், இத்திட்டம், நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள், முடிக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால், அடிப்படை வசதிகளை உருவாக்கும் திட்டம், இழுபறியாகவே உள்ளது.பள்ளி கல்விகான பட்ஜெட் குறித்து, சமச்சீர் கல்விக்குழு தலைவரும், முன்னாள் துணைவேந்தருமான முத்துக்குமரன் கூறியதாவது: தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டும் எனில், தொடர் மதிப்பீட்டு முறையின் கீழ், ஆசிரியர்களுக்கு, தரமான பயிற்சி திட்டங்களும், மத்திய அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளின்படி, அனைத்துப் பள்ளிகளிலும், போதுமான ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.காலி பணியிடங்களே இருக்கக் கூடாது.அதேபோல், அனைத்து வகை பள்ளிகளிலும், சரி சமமான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். இதற்குத் தேவையான திட்டங்களை அறிவித்திருக்கலாம்.பள்ளிக் கல்வி வாரியம், தன்னாட்சி அமைப்பாக செயல்பட வேண்டும். ஆனால், தற்போது, அப்படி, அந்த வாரியம் செயல்படவில்லை. அதிகாரிகளே முடிவெடுக்கின்றனர். இவ்வாறு முத்துக்குமரன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி