கல்வி அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2013

கல்வி அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை.

விருத்தாசலம் அருகே விடைத்தாள்கள் ரயில் தண்டவாளத்தில் கிடந்த விவகாரம் தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறும்போது, விடைத்தாள்கள் ரயில் தண்டவாளத்தில் கிடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்துள்ளது.இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி கடலூர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோனிராஜ், மாவட்டக் கல்வி அலுவலர் வடிவேலு ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அவர்கள் இப்போது சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த அறிக்கை விரைவில் எனக்கு கிடைக்கும். அதன்அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற துரதிருஷ்டவசமான நிகழ்வுகளில் கடந்த காலங்களில் எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதைப் போன்றே தற்போதும் மாணவ-மாணவிகளுக்குப் பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.விடைத்தாள் எரிந்த விவகாரம்: 2008 ஏப்ரல் 24-ம் தேதிஇரவு வேலூர் ஊரிசு மேல்நிலைப் பள்ளி விடைத்தாள் திருத்தும் மையத்தில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதில் அங்கு திருத்துவதற்காக வைத்திருந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களின் 52,020 விடைத்தாள்கள் எரிந்து சாம்பலாகின. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் நேரில் சென்று விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்தார். பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படவில்லை. மாறாக அவர்கள் அரையாண்டுத் தேர்வில்பெற்றிருந்த சராசரி மதிப்பெண் கணக்கிடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி