வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்காக மகப்பேறுக்கு பிந்தைய விடுமுறை எடுத்துக் கொள்ளும் உரிமை அரசு ஊழியரான தாய்க்கு உண்டு -சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2013

வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்காக மகப்பேறுக்கு பிந்தைய விடுமுறை எடுத்துக் கொள்ளும் உரிமை அரசு ஊழியரான தாய்க்கு உண்டு -சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

குழந்தையைப் பராமரிப்பதற்காக மகப்பேறுக்கு பிந்தைய விடுமுறை எனக்கு தர வேண்டும் என்றும், குடும்ப இன்சூரன்ஸ் திட்டத்தில் எனது குழந்தையின் பெயரையும் சேர்க்க வேண்டும் என்றும் கோரிசென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் பெண் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சந்துரு, வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்தாலும் தனது குழந்தையைப் பராமரிப்பதற்காக மகப்பேறுக்குப் பிந்தைய விடுமுறை எடுத்துக் கொள்ளும் உரிமை மனுதாரரான தாய்க்கு உள்ளது என்று அண்மையில் தீர்ப்பளித்துள்ளார்.வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றாலும் அந்தக் குழந்தைக்கு மனுதாரரும், அவரது கணவரும்தான் பெற்றோர் என்பதில் பிரச்னை எதுவும் இல்லை. பிறந்த குழந்தையை தாயார் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். மேலும், இதன் மூலமே தாய்க்கும், குழந்தைக்குமான பந்தம் வளர்த்தெடுக்கப்படும். ஆகவே, மகப்பேறுக்குப் பிந்தைய விடுமுறையை மனுதாரருக்கு துறைமுக நிர்வாகம் அளித்திட வேண்டும். அந்தக் குழந்தையின் பெயரையும் குடும்ப இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்த்திட வேண்டும் என்று நீதிபதி சந்துரு தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி