தேர்வுப் பணி ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் கவனம் செலுத்தக்கூடாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2013

தேர்வுப் பணி ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் கவனம் செலுத்தக்கூடாது.

"தேர்வு பணியில், ஈடுபடும் ஆசிரியர்கள், மாற்றுப்பணியில் கவனம் செலுத்தக்கூடாது," என, அறை கண்காணிப்பாளர்களுக்கு, ஆலோசனை வழங்கப்பட்டது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நான்காயிரத்து 686 மாணவர்கள், நான்காயிரத்து 541 மாணவியர் சேர்த்து ஒன்பதாயிரத்து 227 பேர் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம், 36 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, தனித்தேர்வாளர்களாக மாணவர்கள் 200 பேரும், மாணவியர் 232 பேரும் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக, பொள்ளாச்சியில், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், வால்பாறையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தேர்வு பணியில், ஈடுபடுத்தப்படவுள்ள அறை கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், டி.இ.ஓ., பேசியதாவது: தேர்வு மையங்களில் அனைத்துஏற்பாடுகளும், தயார் நிலையில் இருக்க வேண்டும். அடிப்படை வசதிகளில், எவ்வித குறைபாடும் இருத்தல் கூடாது. அறை கண்காணிப்பாளர்கள், தேர்வு நேரத்துக்கு முன்னதாகவே, மையத்துக்கு வர வேண்டும். தேர்வுக்கு அரை மணி நேரத்துக்கு முன், அறைக்கு சென்று, இருக்கை வசதி, பதிவெண் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.தேர்வு முடியும் வரை, ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் கவனம் செலுத்தக்கூடாது. கூடுதல் அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும். பொதுத்தேர்வு முடியும், வரை வெளியாட்கள், பள்ளிக்குள் நுழையாதவகையில், அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். மேலும், தேர்வின் போது, முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு, வழங்கப்படும் தண்டனை குறித்து, மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.தேர்வின் போது, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்துஎடுத்துரைக்க வேண்டும். தேர்வு நேரம் முடிந்தவுடன், மாணவர்களிடம், விடைத்தாள் பெற்று, பாதுகாப்பாக, கண்காணிப்பு அறைக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். முதன்மை கண்காணிப்பாளர்கள், மாணவர்கள் குறித்த பட்டியலை தயார் நிலையில் வைத்திருப்பதுடன், அறை கண்காணிப்பாளர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் ஆலோசனை வழங்கினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி