இந்தியாவிற்கு வருகிறது Google Nexus 7 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specificationsand Price] - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2013

இந்தியாவிற்கு வருகிறது Google Nexus 7 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specificationsand Price]

Android பயனர்கள் பலருக்கும் கூகுள் Product ஒன்றை வாங்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்து வருகிறது. Update, வசதி மற்றும் விலை போன்றவை தான் அதற்கு காரணம். நீங்கள் இந்தியாவில் இருந்தால் அந்த ஆசை தற்போது நிறைவேறப் போகிறது. ஆம் கூகுள் நிறுவனம் Nexus 7 Tablet ஐ இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இதன் விலை ரூபாய் 15,999*. ஏப்ரல் 5 முதல் Ship செய்யப்படும். இப்போதே ஆர்டர் செய்யலாம்.
Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில்(!!!) இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 1.2  MP கேமராவை முன்னால் கொண்டுள்ளது.இதன் மூலம் HD Video Recording செய்ய முடியும்.இது 7 Inch IPS LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.இது 1 GB RAM மற்றும் 1.2 GHz Quad-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 16GB. Micro-SD கார்டு உள்ளிடும் வசதி இல்லை. அத்தோடு இது Li-Ion 4325 பேட்டரியுடன் வருகிறது. இவற்றோடு Bluetooth, Wi-Fi, GPS, போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது. இதில் Sim Card உள்ளிடும் வசதி இல்லை. ஆதலால் இது GSM Device கிடையாது. இதன் எடை 340 கிராம்கள் மற்றும் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி