அறிவோம்- இந்தியாவில் அறிமுகமாகிறது Samsung Galaxy S2 Plus முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price] - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2013

அறிவோம்- இந்தியாவில் அறிமுகமாகிறது Samsung Galaxy S2 Plus முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]

அடிக்கடி பல புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு மார்க்கெட்டில் தன் இடத்தை உறுதியாக வைத்திருக்கும் சாம்சங் நிறுவனத்தின் புதிய வெளியீடு Samsung Galaxy S2 Plus. சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்தபோன் தற்போது இந்தியாவில் ரூபாய் 22,900 த்துக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 2 MPகேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.இது 4.3 Inch Super AMOLED Plus Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.இது 1 GB RAM மற்றும் 1.2 GHz Dual-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8GB மற்றும் 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Ion 1650 mAh பேட்டரியுடன் வருகிறது. இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி