UGC-NET தேர்வு முடிவுகள் வெளியீடு:39,226பேர் வெற்றி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2013

UGC-NET தேர்வு முடிவுகள் வெளியீடு:39,226பேர் வெற்றி.

நாடு முழுவதும் நடைபெற்ற விரிவுரையாளர் பணிக்கான UGC-NET தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்தாண்டு டிசம்பர் 30ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 8 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர்.இதில் 39ஆயிரத்து 226 பேர் மட்டுமே NET எனப்படும் தேசிய தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர 3 ஆயிரத்து 669 பேர், Junior Research Fellowshipக்கு தகுதி பெற்றுள்ளனர்.இதுதொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு முடிவுகளை UGC NET ONLINE என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். டிசம்பர் மாதம் நடைபெற்ற NET தேர்வு மொத்தம் 78 பாட பிரிவுகளுக்கு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 77 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி