Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கேட்-2013 தேர்வு தேதி அறிவிப்பு.

0 Comments

இந்த 2013ம் ஆண்டிற்கான கேட் தேர்வு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இதை அறிவித்துள்ளன.இந்தியாவின் உயர்தர மேலாண்மை கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம்.,களில் எம்.பி.ஏ., படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இந்த கேட் தேர்வில் ஆர்வமுடன் பங்கு கொள்வார்கள். இத்தேர்வு, மொத்தம் 20நாட்கள் நடத்தப்படுகிறது.இத்தேர்வுக்கான வவுச்சர்கள்(vouchers), அக்சிஸ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில், வரும் ஜுலை 29ம் தேதி முதற்கொண்டு, செப்டம்பர் 24ம் தேதி வரை கிடைக்கும். மேலும், Registration window, ஜுலை 29 முதல் செப்டம்பர் 26 வரை திறந்திருக்கும். இந்தமுறை, 4 புதிய தேர்வு மையங்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம், மொத்த தேர்வு மையங்களின் எண்ணிக்கை 40ஆக உயர்கிறது. சூரத், உதய்பூர், திருவனந்தபுரம், விஜயவாடா போன்ற இடங்களில் அந்த புதிய தேர்வு மையங்கள் அமையவுள்ளன என்று ஐ.ஐ.எம்., வடடாரங்கள் தெரிவித்தன.

2013-14 கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்த முதற்கட்டமாக மாநில அளவிலான பயிற்சி மற்றும் கையேடு வடிவமைப்பு 03.05.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

0 Comments

click here to download the SCERT proceeding of std 9 - CCE and Trimester State leveltraining on 03.05.2013

"இரட்டைப் பட்டம்" வழக்கு ஜூன் 10-க்கு ஒத்திவைப்பு, ஆசிரியர் பொது மாறுதல் ஜூன் 10-க்குள் நடத்த வாய்ப்புகள் குறைவு!

0 Comments

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரட்டை  பட்டம் மற்றும் மூன்றாண்டு பட்டம் முடித்தோர் அகிய இரு தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட்டது. நீதிபதிகள் அரசின் நிலை குறித்து அரசு வழக்கறிஞரிடம் கேட்கையில், அரசிடம் ஆலோசித்துவிட்டு பதிலளிப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து. இரு தரப்பு இறுதி விசாரணை ஜுன் 10க்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.அதுவரை  இடைக்கால தடை மற்றும் விசாரணை நீடிப்பதால், பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என நீதிபதிகள் அரசு தரப்பிற்கு தெரிவித்ததாக இவ்வழக்கை தொடுத்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கு இந்நிலையில் இருப்பது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை மே மாதத்திற்குள் முடித்திட முடியாத நிலையை உருவாக்கிவிடுமோ என ஆசிரியர்கள் கவலை கொள்கின்றனர். இதனால் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 10-க்குள் நடக்க வாய்ப்புகள் குறைவு என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்தது: இன்று நள்ளிரவு முதல் அமல்.

0 Comments

பெட்ரோல் விலையை நிர்ணயித்து கொள்ளும் உரிமையை இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் 15 மற்றும் 30-ந்தேதிகளில் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.தற்போது கச்சா எண்ணை விலை வீழ்ச்சி காரணமாக கடந்த மாதம் முதல் பெட்ரோல் விலை குறைந்து வருகிறது. இதுவரை லிட்டருக்கு ரூ.4.65 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் நிலவரப்படி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும்குறைந்துள்ளது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் திருப்திகரமாக உள்ளது.இதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. இதனால் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 ரூபாய் (உள்ளூர் வரிகள் தவிர) குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.08க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.3.18 குறைந்து ரூ.65.90க்கு விற்பனை செய்யப்படும். இதேபோல் டெல்லியில் ரூ.63.09 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.70.35 ஆகவும், மும்பையில் ரூ.69.73 ஆகவும் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. இந்த மாதத்தில் 3-வது முறையாக பெட்ரோல் விலை குறைந்துள்ளது. கடைசியாக கடந்த 15-ம் தேதி லிட்டருக்கு ஒரு ரூபாயும், அதற்கு முன்னர் 85 பைசாவும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன் 10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 Comments

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு  விசாரணைஜூன்10-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இவ்வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் 2013 ஜூன்10 வரைபட்டதாரி  ஆசிரியர்கள் பதவி உயர்வுகள் எதுவும் வழங்கப்படாது என நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.இவ்வழக்கு இந்நிலையில் இருப்பது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை மே மாதத்திற்குள் முடித்திட முடியாத நிலையை உருவாக்கி விடுமோ என ஆசிரியர்கள் கவலை கொள்கின்றனர்.

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 32 முதுகலை ஆசிரியர், 6239 + 4748 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் 785 BT+5 PG, பணியிடங்களு க்கு ஏப்ரல் 2013 மாத ஊதியம் வழங்க ஆணை.

0 Comments

DSE - 4748 TEACHING & NON-TEACHING POSTS SANCTIONED AS PER GO.279 (1D)SCL EDN DEPT DT.20.07.2012 - PAY CONTINUATION FROM APRIL 2013 CLICK HERE...

DSE - 6239 TEACHING & NON-TEACHING POSTS SANCTIONED AS PER GO.142 - 20.5.1999 & GO.200 (1D) SCL EDN DEPT DT.26.06.2012 - PAY CONTINUATION FROM APRIL 2013 CLICK HERE..

DSE - 785 BT + 5 PG TRs POSTS SANCTIONED AS PER GO.101, 121, 109, 129, 162, 169, 172, 186,256 - PAY CONTINUATION FOR APRIL 2013 CLICK HERE...

DSE - 32 PG TRs POSTS SANCTIONED AS PER GO.175 - 20.07.2009 & 199 - 26.06.2012 PAY CONTINUATION FOR APRIL 2013 CLICK HERE...

நர்சரி பள்ளிகள் அங்கீகாரம் பெற அறிவுறுத்தல்.

0 Comments

புதிதாக துவங்கப்படும் மற்றும் புதுப்பிக்க தவறிய நர்சரி பள்ளிகள், மே 30க்குள் அங்கீகாரம் பெறுமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூரில் நர்சரி பள்ளிகள், ஜூன் மாதம் துவங்குகிறது; ஏப்., துவக்கத்தில் இருந்து, மே இறுதி வரை நர்சரி பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை நடக்கிறது. மாணவர் சேர்க்கையில் "பிஸி"யாகஉள்ள பள்ளிகள், அதிக வேலைப்பளு காரணமாக, பள்ளி அங்கீகாரத்தை புதுப்பிக்க தவறும் வாய்ப்புள்ளது.அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக துவங்கப்படும் நர்சரி பள்ளிகள்; மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து புதுப்பிக்க தவறிய நர்சரி பள்ளிகள் வரும் மே 30க்குள், அங்கீகாரத்தை பெற வேண்டும்.அங்கீகாரம் பெறவோ, புதுப்பிக்கவோ தவறும் பட்சத்தில், நர்சரி பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம்ரத்து.

0 Comments

குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை, முறையாக செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு, உத்தரவிட்டுள்ளது."பள்ளிகளில், காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர், கழிவறை வசதி போன்ற கட்டமைப்பு வசதிகளை, ஏற்படுத்த வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற, தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.அதன்படி, தமிழகத்தில் உள்ள நர்சரி, பிரைமரி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.கட்டமைப்பு வசதிகளை, ஏற்படுத்தாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரித்தை ரத்து செய்ய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை விபரம்:
* பள்ளிகளில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
* அனைத்து கழிப்பறைகளும், பயன்பாட்டில் உள்ளதா என்பதை, பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்து, பயன்பாட்டில் இருப்பதை, அவ்வப்போது, உறுதி செய்ய வேண்டும்.
* தனியார் பள்ளிகளில், அடிப்படை கட்டமைப்பு வசதி இருக்கிறதா என்பதை அறிய, கல்வித்துறை அலுவலர்கள், அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
* தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் முன், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேணடும்.
* ஒன்றிய அளவில், ஒரு குழுவை அமைத்து, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தேவையான வசதிகளை ஏற்படுத்த, தனியார் பள்ளிகள் தவறினால், அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, கல்வித்துறை அதிகாரி, ஒருவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், தேவையான அளவிற்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனினும், பள்ளிகளை தரம் உயர்த்தியது மற்றும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரித்தது போன்ற காரணங்களால், கூடுதல் வசதி தேவைப்படுகிறது.அந்த வகையில், மாநிலம் முழுவதும், 2,733 அரசுப் பள்ளிகளில்,கூடுதலாக, குடிநீர், கழிப்பறை வசதிகள் தேவைப்படுகிறது. ஊரக வளர்ச்சித்துறை நிதி மற்றும் தேசிய கிராமப்புற குடிநீர் உள்ளிட்ட திட்டங்களின் கீழ், 50 கோடி ரூபாயை, நபார்டு வங்கி, இந்த வசதியை செய்ய, ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த நிதியை பயன்படுத்தி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், 100 சதவீத குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி விடுவோம். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

51 ஆயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை.

0 Comments

பள்ளி படிப்பை, இடையில் நிறுத்திய குழந்தைகள் மற்றும் பள்ளிக்கே செல்லாமல் உள்ள குழந்தைகள், 51 ஆயிரம் பேர் இருப்பது, கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவர்களை, வரும் கல்வி ஆண்டில், பள்ளியில் சேர்க்க கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது.பள்ளி கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து, தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தியது. பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகள், பள்ளிக்கே செல்லாத குழந்தைகள் என, இரு பிரிவினர் குறித்தும், கணக்கு எடுக்கப்பட்டது.இதில், 51 ஆயிரத்து, 173 பேர், பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது, தெரிய வந்துள்ளது.இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும், முழுமையான தகவல்களை, பள்ளி கல்வித்துறை சேகரித்துள்ளது."பள்ளி செல்லாததற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், வரும் கல்வி ஆண்டில், அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது" என, கல்வித்துறை அதிகாரி, ஒருவர் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:பள்ளி செல்லாத குழந்தைகளில், பிற மாநிலங்களில் இருந்து, இங்கு குடிபெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். சாலை ஓரத்தில் வசிக்கும் சிறுவர்களும்இருக்கின்றனர். குழந்தைகள் ஒவ்வொருவரின் பெயர், அவர்களுடைய புகைப்படங்கள், குடும்ப பின்னணி, சமூக, பொருளாதார நிலை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சேகரித்து உள்ளோம்.அனைவரையும், வரும் கல்வி ஆண்டில், அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதற்கு, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவர்கள் அனைவரும் பள்ளிகளில் சேர்ந்துவிட்டால், பள்ளி செல்லாத குழந்தைகளே இல்லை என்ற நிலை தமிழகத்தில் ஏற்படும். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஆசிரியர் வருவாரா... பாடம் சொல்லித் தருவாரா...?

0 Comments

ஆசிரியர் வருவாரா... பாடம் சொல்லித் தருவாரா..." என்ற ஏக்கத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள், பூட்டிய பள்ளி வாசலில் காத்திருந்தனர்.தேனி மாவட்டம், மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறனர். இவர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும், பள்ளிக்கு செல்கின்றனர். மற்ற நாட்களில், பள்ளி பூட்டப்பட்டு இருப்பதால் ஏமாற்றத்துடன், மாணவர்கள் வீடு திரும்புகின்றனர்.இந்த பள்ளியில், கடந்த ஆண்டு, 25 மாணவர்கள் படித்து வந்தனர்; இந்த ஆண்டு ஆசிரியர்கள் சரியாக வராததால், மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டது. இந்திராநகர் போன்ற மலைக் கிராமங்களில், மற்ற பள்ளிகளிலும், இதே போன்று, மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:சின்னவனம்:இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஆசிரியர்கள் பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டும் பள்ளிக்கு வருவர்; அப்படியே, வந்தாலும் காலை 11:00 மணிக்கு வந்து பிற்பகல், 2:00 மணிக்கு சென்று விடுகின்றனர். இதனால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது.சன்னாசி:கடந்தாண்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தற்போது, பள்ளிக்கு ஆசிரியர்கள் வருவதில்லை. இது சம்பந்தமாக, கிராம பொதுமக்கள் சார்பில் தலைமை ஆசிரியர் கண்ணனிடம் முறையிட்டோம். அதற்கு அவர், உங்கள் குழந்தைகளின், டி.சி-யை வாங்கி கொண்டு வேறு பள்ளில் சேர்த்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்.முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி: கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, தினமும் ஆசிரியர்கள் பள்ளி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆதரவற்ற குழந்தை இல்லங்கலுக்கு ரூ.6 கோடி மானியம்.

0 Comments

தமிழகத்தில், தொண்டு நிறுவனங்களில் வசிக்கும், குழந்தைகளின் உணவு செலவுக்காக, சமூகநலத் துறை, இந்த ஆண்டு, 6.04 கோடியை, மானியமாக வழங்கி உள்ளது.ஐந்து முதல், 18 வயதிலான, 13,485 குழந்தைகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும், 171 குழந்தை இல்லங்களில் வசித்து வருகின்றனர். பெற்றோரை இழந்த குழந்தைகள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டவர்களின் குழந்தைகள், நீண்ட நாட்கள், சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளி பெற்றோரின் குழந்தைகள், இங்கு வசிக்கின்றனர்.இவற்றில், ஒவ்வொரு, 25 குழந்தைகளையும் பராமரிப்பதற்கு, ஒரு இல்லத்தாய் / இல்லத் தந்தை மற்றும் உதவியாளர் இருப்பர். ஒரு குழந்தைக்கு, அவர்களின் உணவு செலவுக்காக, ஒரு மாதத்திற்கு, 450 ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இத்தொண்டு நிறுவனங்களுக்கு, இந்த நிதியாண்டுக்கான மானியமாக, 6.04 கோடி ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் வழங்கும் தேதி ஓரிருநாளில் அறிவிப்பு.

0 Comments

கால்நடை மருத்துவக் கல்லூரியில், நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி, ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்" என, பல்கலை துணை வேந்தர் பிரபாகரன் தெரிவித்தார்.நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், உலக கால்நடை தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்குபின், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை துணைவேந்தர் பிரபாகரன்நிருபர்களிடம் கூறியதாவது:ஆண்டு தோறும் ஏப்ரல் இறுதி வாரத்தில், உலக கால்நடை தினவிழா கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டும் அரசு, தனியார் அமைப்பினர் ஒருங்கிணைந்து கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டுஅனைத்து கால்நடைகளுக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்பட்டது.நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இரண்டு ஆராய்ச்சி கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக கிராமப்புற மக்கள் வசதி பெறும் வகையில், அருசு பல்வேறு நலத்திட்டம், மேம்பாட்டு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.விலையில்லா கறவைமாடு, வெள்ளாடு வழங்கும் திட்டத்தில், கால்நடை மருத்துவர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. புதிதாக துவங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை, ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.ஆண்டு தோறும் கல்லூரியை அங்கீகாரத்தை புதுப்பிக்க குழுவிடம் இருந்து ஒப்புதல் பெறவேண்டும்.அதை தொடர்ந்து வகுப்பு துவக்க வேண்டும். ஆனால், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அதற்கான விண்ணப்பம் வழங்கும் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.இந்தியாவில் முதன் முறையாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலையில், தொலைதூரக் கல்வியில் முதுகலை பட்டயப்படிப்பில், 11 பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும், 13 பாடப்பிரிவுகள் துவங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்கள் விரைவில் மாற்றியமைக்கப்படும்: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்.

0 Comments

ஆசிரியர் தகுதித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் எளிதாக ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துணைவேந்தர் கெ.விஸ்வநாதன் தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பி.எட்.,எம்.எட். பட்டதாரிகளின் தேர்ச்சி விகிதம் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து, சென்னையில் ஏப்ரல் 17-ஆம் தேதி கருத்துப்பட்டறை நடத்தப்பட்டது.இதையொட்டி, எனது தலைமையில் நடைபெற்றகருத்தரங்கில், தென் மாநிலங்களில் இருந்து சிறந்த கல்வியாளர்கள், அறிஞர்கள் பங்கேற்று, பாடத் திட்டங்களில் கொண்டுவர வேண்டிய கருத்துகளைத் தெரிவித்து, விவாதங்கள் நடைபெற்றன. இதனடிப்படையில், இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப ஆசிரிய மாணவர்கள் சிறந்த கல்வியைப் போதிக்கிற வகையிலும், தகுதித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் எளிதாக எதிர்கொண்டு வெற்றிபெறும் வகையிலும், பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.இவை விரைவில் பல்கலைக்கழக வலைதளத்தில் வெளியிடப்படும். இதன்மூலம் பல்வேறு அறிஞர்கள், கல்வியாளர்கள் கருத்துகள் அறியப்படும். அவர்கள் கூறும் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு,தரமான வகையில் புதிய பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.தற்போதைய பாடத்திட்டத்தின்கீழ் பயின்றுவரும் ஆசிரிய மாணவர்கள் மற்றும் ஏற்கெனவே பி.எட்., எம்.எட். பட்டங்கள் பெற்றவர்களையும்தற்போதைய கல்விச் சூழலுக்கு ஏற்ப தயார்படுத்தும் வகையில் உலகளாவிய கருத்தரங்கம் ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும்.இதில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான்,தைவான், சீனா, சிங்கப்பூர்,மலேசியா மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தலைசிறந்த கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும்,புதிய கற்பித்தல் முறையை கற்பிக்கவும், புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் கற்பித்தல் முறைகளை பின்பற்றவும் இதுபோன்ற பன்னாட்டு கருத்தரங்குகள்உறுதுணையாக இருக்கும். தொலைநிலைக் கல்வி இயக்ககம்: ஆசிரியக் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி இயக்ககம் உருவாக்குவதற்கு ஆட்சிமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.இதனடிப்படையில், 3 மாதத்தில் முதல்கட்டமாக கல்வி உளவியல் துறை, கல்வி தத்துவ இயல் துறை, கல்வி நுட்பவியல் துறை, கல்வி மேம்பாட்டுத் துறை, கல்வி ஏற்பாடு மற்றும் மேம்பாட்டுத் துறை, விழுமக்கல்வித் துறை ஆகிய 6 துறைகளுடன் தொலைநிலைக் கல்வி இயக்ககம் துவக்கப்படவுள்ளது.இதற்கான பேராசிரியர்கள், இணை மற்றும் உதவிப்பேராசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். தனியார் கல்லூரி மாணவருக்கும் உதவித்தொகை: தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் எஸ்.சி, எஸ்.டிமாணவர்களுக்கும் அரசு கல்வி உதவித்தொகை வழங்கி உத்தரவிட்டுள்ளது.பல்கலைக்கழக வலைதளத்தில் அரசு உதவியுடன் தொடங்கப்பட்டுள்ள வலைநூலகத்தில் கல்வியியல் பாடப் புத்தகங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். விருப்பமுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகத்தைஅணுகினால் இந்த வலைதளத்தைப் பயன்படுத்தி வகுப்புகள் நடத்திக் கொள்ள முடியும் என்றார

2–ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுகள் ஜூன்24–ந்தேதி தொடங்குகிறது.

0 Comments

தொடக்க கல்வி 2–ம்ஆண்டுக்கான பட்டயத்தேர்வு (இடை நிலை ஆசிரியர் பயிற்சி பள்ளி) தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:–ஜூன் 24–ந்தேதி இந்திய கல்வி முறை, 25–ந்தேதி கற்றலைஎளிதாக்குதலும், மேம்படுத்துதலும் –2, 26–ந்தேதி மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்)–2,இளஞ்சிறார் கல்வி –2, 27–ந்தேதி ஆங்கிலம் மொழிக்கல்வி –2, 28–ந்தேதி கணிதவியல் கல்வி –2, 29–ந்தேதி அறிவியல் கல்வி –2, ஜூலை 1–ந்தேதிசமூக அறிவியல் கல்வி –2, 4–ந்தேதி கற்கும் குழந்தை, 5–ந்தேதி கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்–1, 6–ந்தேதி மொழிக்கல்வி( தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) –1, இளஞ்சிறார் கல்வி –1 8–ந்தேதி ஆங்கில மொழிக்கல்வி –1, 9–ந்தேதி கணிதவியல் கல்வி –1, 10–ந்தேதி அறிவியல் கல்வி –1, 11–ந்தேதி சமூக அறிவியல் கல்வி –1 அனைத்து தேர்வுகளும் காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை நடக்கும். இவ்வாறு தேர்வுக்கான அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவு செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுகிறது.

0 Comments

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் நடத்திய இளநிலை, முதுகலை பட்டப்படிப்பு தேர்வுகள், சான்றிதழ் படிப்புகள் தேர்வு ஆகியவற்றின் முடிவு (செவ்வாய்க்கிழமை) இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.  (www.tnou.ac.in.) மாணவர்கள் மறு மதிப்பீடு, மறுகூட்டல், விடைத்தாளின் நகல் ஆகியவற்றிற்கு 21 நாட்களுக்குள் (மே 5–ந்தேதிக்குள்) விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதி தேர்வு... தயாராவது எப்படி?

0 Comments

நாங்கள் காரைக்கால் பகுதியிலிருந்து சமீபத்தில்தான் நாகப்பட்டினம் குடிபெயர்ந்து இருக்கிறோம். எம்.எஸ்சி., பி.எட் வரையிலான என்னுடைய பள்ளி, கல்லூரிப் படிப்புகளை புதுவை அரசின் கீழ் முடித்திருக்கிறேன். தற்போது தமிழக அரசின் ஆசிரியர் பணிக்கான டி.இ.டி தேர்வு எழுத முடியுமா? டி.இ.டி தேர்வெழுத என்ன மாதிரியான தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்?''பெ.வெங்கடாசலம், நிர்வாக இயக்குநர், நேஷனல் இன்ஸ்டிட்யூட், மதுரை:''தமிழக அரசின் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளவும், பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு உங்கள் கல்விச் சான்றிதழ்கள், தற்போதைய தமிழக முகவரி அத்தாட்சி ஆகியவற்றுடன் உங்கள் பகுதி வேலைவாய்ப்பு அலுவலகத்தை நாடுங்கள்.தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது.3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

தாள்-I... 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள் இது.

தாள்-II... 6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்களுமாக, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே கேள்வித்தாளில் கணிதம் அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலில் இருந்து 60 வினாக்கள் அமைந்திருக்கும்.

ஆக, தாள்- I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்- II என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப் பட்டயம் தகுதியோடு... கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்து பட்டதாரி ஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுதலாம். இந்த வகையில்இடைநிலை, பட்டதாரி என இரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.தாள் - I எழுதுபவர்கள் 1 - 5 வரையிலான வகுப்பு பாடப்புத்தகங்களில் ஆழமாகவும், 6 - 8 வரையிலான வகுப்பு பாடங்களில் ஓரளவேனும் தயாராக வேண்டும். கூடவே, ஆசிரியர் பட்டய படிப்புக்கான கல்வியியல் மற்றும் உளவியல் பாடத்திலும் தயாராவது அவசியம். தாள்- II எழுதுபவர்கள் 6 - 10 வரையிலான தங்கள் பிரிவு பாடங்களில் ஆழமாகவும் 11 மற்றும் 12 வகுப்புகளில் தங்கள் பிரிவு பாடங்களில் ஓரளவுக்கும் தயாராக வேண்டும். கூடவே பி.எட் பாடத்திட்டத்தில் உள்ள கல்வியல் மற்றும் உளவியலில் நன்கு தயாராவதும் அவசியம்.150 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையும் ஒரு மதிப்பெண் பெறும். வினாக்கள் அனைத்தும் 'அப்ஜெக்டிவ் டைப்' எனப்படும் 'கொள்குறி' வினா வகையை சேர்ந்தவை. 150 மதிப்பெண்களில் 60 சதவிகிதம், அல்லது 90 மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி நிலையை எட்டுகிறார்கள்.காலிப்பணியிடங்களைப் பொறுத்து அரசு அறிவிக்கும்போது இந்த டி.இ.டி தேர்வில் தகுதி நிலையை எட்டியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதி பெறாதவர்கள் அடுத்த ஆண்டு அல்லது அரசு அறிவிக்கும் அடுத்த தகுதித் தேர்வில் தங்கள் திறமையை நிரூபிக்கலாம். தற்போது அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகம் என்பதால், தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்குமே பணியிடம் உறுதியாகி வருகிறது. ஒருவேளை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைவிட தகுதியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது போட்டியை நிர்ணயிக்க, டி.இ.டி மதிப்பெண்ணோடு ப்ளஸ் டூ, பட்டயம் அல்லது கல்லூரி மதிப்பெண்களுக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் வழங்கி இறுதி முடிவு எடுக்கப்படும், அல்லது அரசின் அப்போதைய முடிவின்படி மாறுதலுக்கு உள்ளாகலாம்.தேர்வுக்குத் தயாராவதில் அத்தியா வசிய அடிப்படை... மாதிரித் தேர்வுகளை நீங்களாகவே அதிகம் எழுதிப்பார்ப்பதில் இருக்கிறது.ஏனெனில், இதுவரை நடந்திருக்கும் ஒரு தேர்வு மற்றும் ஒரு மறுதேர்வு இவற்றின் அனுபவ அடிப்படையில், தேர்வெழுதியவர்கள் வினாத்தாளில் கடினத்தன்மை மற்றும் நேரமின்மை இவற்றை தேர்வு தடுமாற்றங்களாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே, கடின பயிற்சி மற்றும் நேர நிர்வாகம் இவற்றை கவனத்தில் கொண்டு தேர்வுக்குத்தயாராகலாம். தனியார் பயிற்சிகள் மற்றும் கைடுகள் வெளி மார்க்கெட்டில் ஏராளமாக கிடைக்கின்றன. தேவையெனில் அவற்றில் தகுதியானவற்றை அணுகி பயன்பெறலாம். மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்குhttp://trb.tn.nic.in/என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தை நாடுங்கள்.

Thanks- அவள் விகடன

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives