பெட்ரோல் விலை லிட்டருக்கு 2. 50 ரூபாய் வரை குறையும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2013

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2. 50 ரூபாய் வரை குறையும்?

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் வரை குறையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையில் ஏற்பட்டு வரும் சரிவு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை அடுத்து பெட்ரோல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன  ,மேலும் லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 2.50 ரூபாய் வரையிலும் விலை குறைக்கப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த நான்கு வாரங்களில் 3 முறை குறைக்கப்பட்டுள்ள பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 60 காசுகள் வரை குறைந்துள்ளது. தற்போது 4 வது முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட உள்ள நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அடுத்தபதினைந்து மாதங்களுக்கு டீசல் விலை குறையும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி