தொடக்கக்கல்வித் துறை இட மாறுதல் மற்றும் பதவியுயர்வு கலந்தாய்வு குறித்த தகவல் இன்று (26.04.2013) மாலைக்குள் வரும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2013

தொடக்கக்கல்வித் துறை இட மாறுதல் மற்றும் பதவியுயர்வு கலந்தாய்வு குறித்த தகவல் இன்று (26.04.2013) மாலைக்குள் வரும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் தகவல்.

தொடக்கக்கல்வித் துறைக்கான 2013-14ஆம் ஆண்டிற்கான இடமாறுதல் மற்றும் பதவியுயர்வு கலந்தாய்வு குறித்து இதுவரை எந்த தகவலும் வராததால் ஆசிரியர்கள் மத்தியில் இதுகுறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் திரு.முருக செல்வராஜன் தெரிவித்தது, “பள்ளி வேலை நாட்களுள் கலந்தாய்வு குறித்து அறிவித்தால் தான் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை அளிக்க ஏதுவாக இருக்கும். இதுவரை அறிவிப்பு ஏதும் வராததால், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தொடக்கக்கல்வித் துறை இயக்குனருக்கு இதுகுறித்து வலியுறுத்தி கடிதம் அளித்ததோடு நேற்று மாலையும் இன்று காலையும் தொடக்கக்கல்வித் துறை இயக்குனர் திரு.இராமேஸ்வர முருகன் அவர்களிடம் தொலைப்பேசி வாயிலாக பேசுகையில், கல்வித்துறை அமைச்சர் மற்றும்  கல்வித்துறை முதன்மை செயலாளரிடம் ஆலோசித்து விட்டு இன்று (26.04.2013) மாலைக்குள் இது குறித்து உறுதியான தகவலை தருவதாக தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி