கோடைவிடுமுறையில் வகுப்பு: கண்டித்து ஆசிரியர்கள் மே 2 உண்ணாவிரதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2013

கோடைவிடுமுறையில் வகுப்பு: கண்டித்து ஆசிரியர்கள் மே 2 உண்ணாவிரதம்.

கோடை விடுமுறையை ரத்து செய்து பாடம் நடத்தும் உத்தரவைக் கண்டித்து மே 2ஆம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படும் என தமிழ்நாடு பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக் கழக ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.நாகர்கோவிலில் இக்கூட்டமைப்பின் கூட்டம் அமைப்பாளர் தா. சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது. இணை அமைப்பாளர் ஆன்றனி ராஜ் முன்னிலை வகித்தார்.தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலக மாவட்டத் தலைவர் டி. ஜோஸ் டைட்டஸ், செயலாளர் சுரேந்திரன், கல்வி மாவட்டச் செயலாளர் சுப்பிரமணிய ஐயர், பொருளாளர் என்.எஸ். பகவதி, தமிழாசிரியர் கழக மாவட்டப் பொருளாளர் சுரேஷ்குமார், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தலைவர் விக்ரமன், மாவட்டச் செயலாளர் ஜான் ஜென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கோடைவிடுமுறையை ரத்து செய்து பாடம் நடத்த தொடக்கக் கல்வித்துறையில் இருந்து ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.தொடக்கக் கல்வித்துறையின் இந்த நடவடிக்கை ஆசிரியர் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசுக்கும் அவப் பெயரை ஏற்படுத்துவதாக உள்ளது.எனவே கல்வித்துறையின் இந்த நடவடிக்கையை கைவிடக்கோரி நாகர்கோவிலில் மே 2ஆம் தேதி ஒரு நாள் அடையாள அண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி