மே 31ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2013

மே 31ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 31ம் தேதி காலை,9:15 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 27ல் துவங்கி, கடந்த, 12ம் தேதி வரை நடந்தன. 3,012 மையங்களில் நடந்த தேர்வில்,10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களில், 5 லட்சத்து, 43 ஆயிரத்து, 152 பேர், மாணவர்கள்; 5 லட்சத்து, 25 ஆயிரத்து, 686 பேர், மாணவியர்.பத்தாம் வகுப்பு தேர்வுகள் அனைத்துமே, சொதப்பலாக நடந்தன. தமிழில், ஐந்து மதிப்பெண்களுக்கு உரிய விடைகளை நிரப்புவதற்கான வங்கி, "செலான்” வழங்காதது; கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில்,விடைத்தாள் கட்டு, ரயில் தண்டவாளத்தில் விழுந்து சேதமானது; விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், ஆங்கில விடைத்தாள் கட்டுகள் மாயம் என, தொடர் குளறுபடிகள் நடந்தன. இதன் பின், 66 மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்தன.பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன், நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், "பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9ம் தேதி காலை 10:00 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 31ம் தேதி, காலை, 9:15 மணிக்கும் வெளியிடப்படும்” என, தெரிவித்துள்ளார்.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வழக்கமாக, மே 20ம் தேதிக்குள் வெளியாகும். இந்த ஆண்டு, மே 31ம் தேதி வெளியிடப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள், இன்னும் சில மையங்களில் முடியவில்லை என, கூறப்படுகிறது. மேலும், பிளஸ் 2 தேர்வு முடிவிற்குப் பின், மதிப்பெண் சான்றிதழ்களை, மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகள் இருப்பதன் காரணமாக, 10ம் வகுப்பு தேர்வு முடிவு, 10 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டதாக, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி