குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு ஏப்.,29 ல் கவுன்சிலிங். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2013

குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு ஏப்.,29 ல் கவுன்சிலிங்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, இம்மாதம் 29 ல் "கவுன்சிலிங்' நடக்கிறது. கடந்த 2012 ஜூலையில், 10 ஆயிரத்து 500 இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்,சுருக்கெழுத்தர் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. தேர்வு நடந்த பின், கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல், வெளியிடப்பட்டது. அதே மாதத்தில் கலந்தாய்வு நடந்து, நியமன ஆணை பெற்று பணியில் சேர்ந்தனர். ஏற்கனவே அரசு பணியில் உள்ளோரும், இந்த தேர்வில் வெற்றிபெற்றனர். அவர்களுக்கு விரும்பிய துறை கிடைக்காததால், அவர்கள் இந்த பணியில் சேரவில்லை.இதுபோல் 597 பணி இடங்கள், பணி நியமனம் செய்யப்படாமல் இருந்தது. இந்த பணியிடங்களுக்கு, 2012 ல் டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு எழுதியோர் பட்டியிலில் இருந்து, மேலும் 597 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு, இம் மாதம் 29 ல், சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் பணிநியமன"கவுன்சிலிங்' நடக்கிறது. தேர்வில் வெற்றி பெற்று மறு"கவுன்சிலிங்' அழைக்கப்பட்டு, துறை ஒதுக்கீடு பெறாமல் காத்திருப்பில் உள்ள 150 பேரின் நிலை குறித்து இது வரை தகவல் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி