பாரதியார் மகளிர் கல்லூரியில் மே 5ல் கல்வி தகுதித்தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2013

பாரதியார் மகளிர் கல்லூரியில் மே 5ல் கல்வி தகுதித்தேர்வு.

சேலம், ஆத்தூர் அடுத்த தேவியாகுறிச்சி பாரதியார் மகளிர் கல்வி நிறுவனங்களை சக்தி கல்வி அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. கிராமப்புற மாணவிகள் பயன்பெறும் வகையில், 2006ம்கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., துறைகள் துவங்கப்பட்டது.தொடர்ந்து, பாரதியார் மகளிர் பொறியியல் கல்லூரியில், 2012ம்கல்வியாண்டில் எம்.இ., பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டது.அதே போல, 2012-13ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., மாணவிகள் சேர்க்கையில், அதிக சேர்க்கையை பெற்றது குறிப்பிடதக்கது.பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ முடித்த மாணவிகளுக்கு, ஆண்டுதோறும் கல்வி தகுதித்தேர்வு நடத்தி வருகிறது. நடப்பாண்டில், கல்வித்தகுதி தேர்வு மே 5ம் தேதி நடக்க உள்ளது. மாணவிகள் அனைவரும் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.சிறப்பு சலுகையாக, இன்ஜி., கட்-ஆப் மார்க், 185க்கும் அதிகமாக இருந்தால் நான்கு ஆண்டுக்கு டியூஷன் பீஸ் ரத்து, மார்க், 175க்கும் அதிகமாக இருந்தால், முதல் மூன்று ஆண்டுக்கு டியூஷன் பீஸ் இல்லை. அரசு நிர்ணயிக்கும் கட்டணம், 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே பெறப்படுகிறது.கட்-ஆப் மார்க், 150க்கும் அதிகமாக பெற்று, முதல் பட்டதாரியாக இருந்தால் ஒரு பருவ தேர்வுக்கு டியூஷன் பீஸ், 6,250 ரூபாய் செலுத்தினால் போதுமானது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி