கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு ரூ.69.81 கோடி ஒதுக்கீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2013

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு ரூ.69.81 கோடி ஒதுக்கீடு.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்கு, 69.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், பிரமலை கள்ளர் வகுப்பினர் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களின், கல்வி நிலையை மேம்படுத்த, மிகப் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் 289 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், இயங்குகின்றன. இப்பள்ளிகளில், 34,749 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2012-13ம் ஆண்டில், கள்ளர் சீரமைப்புபள்ளிகளின் செயல்பாட்டிற்காக, 53 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 2013-14ம் ஆண்டு, இப்பள்ளிகளின் செயல்பாட்டிற்காக, 69.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என, பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி